ஒலிம்பிக் ஓராண்டு தள்ளிப்போகிறது

தோக்­கியோ: ஒலிம்­பிக் போட்­டி­களை 2021ஆம் ஆண்­டில் நடத்த ஜப்­பா­னும் அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­ற­மும் இணக்­கம் தெரி­வித்­து உள்­ளன.

வரும் ஜூலை 24ஆம் தேதி ஒலிம்­பிக் போட்­டி­கள் தொடங்­க­ இருந்­தன. இந்­த நி­லை­யில், கொரோனா கிரு­மி­த்தொற்றால் பல்வேறு நாடு­களும் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் அப்­போட்­டி­க­ளைத் தள்­ளி­வைக்க வேண்­டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்­தும் குரல்­கள் கிளம்பின. இத­னால், அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­ற­மும் தோக்­கியோ ஒலிம்­பிக் ஏற்­பாட்டுக் குழுவும் கடும் நெருக்­க­டிக்­குள்­ளா­கின.

இந்த நிலை­யில், ஜப்­பான் பிர­தமர் ஷின்சோ அபே­யும் அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றத்­தின் தலை­வர் தாமஸ் பேக்­கும் நேற்­றி­ரவு தொலை­பேசி வழி­யாக கலந்­து­ரை­யா­டி­னர்.

அதன்­பி­றகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு அபே, “ஒலிம்­பிக் போட்­டி­களை ஓராண்­டுக்­குத் தள்­ளி­வைக்க நான் பரிந்­து­ரைத்­தேன். அதனை அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றத் தலை­வர் தாமஸ் பேக் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­டார்,” என்று சொன்­னார்.

நவீன ஒலிம்­பிக்­கின் 124 ஆண்­டு­கால வர­லாற்­றில் அப்­போட்­டி­கள் ஒரு­மு­றை­கூட தள்­ளி­வைக்­கப்­பட்­ட­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இரண்டு உல­கப் போர்­கள் கார­ண­மாக 1916, 1940, 1944ஆம் ஆண்டு­களில் அப்­போட்­டி­கள் நடத்­தப்­ப­ட­வில்லை.

உடற்­கு­றை­யுள்ள விளை­யாட்­டா­ளர்­கள் பங்­கு­பெ­றும் பாரா­லிம்­பிக் போட்­டி­க­ளுக்­கும் இந்த ஓராண்டு தள்­ளி­வைப்பு பொருந்­தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்­ன­தாக, ஒலிம்­பிக் போட்டி­களைத் தள்­ளிப்­போ­டு­வது தொடர்­பில் அடுத்த நான்கு வாரங்­களில் முடி­வெ­டுக்­கப்­படும் என அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றம் கூறி இருந்­தது. ஆனால், அதற்கு அவ்­வ­ளவு காலம் ஆகாது என்று பெயர் வெளி­யிட விரும்­பாத அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்ற நிர்­வாகி ஒரு­வர் கூறி­ய­தாக ‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னத்­தின் செய்தி தெரிவித்தது

தோக்­கியோ ஒலிம்­பிக் போட்டி­க­ளைத் தள்­ளிப்­போட அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றம் தீர்­மா­னித்­து­விட்­ட­தாக அதன் உறுப்­பி­னர் டிக் பௌண்ட் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இவ்­வாண்டு நடத்தப்படுவதாக இருந்தால் ஒலிம்­பிக் போட்டி­களில் இருந்து வில­கு­வ­தாக கன­டா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஏற்­கெ­னவே அறி­வித்­து­விட்­டன. இந்த நிலை­யில், போட்­டி­க­ளைத் தள்­ளி­வைக்­கும்­படி அமெ­ரிக்­கா­வும் சுவிட்­சர்­லாந்­தும் வலி­யு­றுத்­தி­ன.

இவ்­வே­ளை­யில், ஒலிம்­பிக் போட்டி­களை அடுத்த ஆண்டு நடத்­து­வதாக இருந்­தால் 2021 உலக திடல்­தட வெற்­றி­யா­ளர்­கள் போட்டி­களை ஒத்­திப்போடத் தயார் என்­றும் அந்­தக் கால­கட்­டத்­தில் ஒலிம்­பிக்கை நடத்­திக்கொள்­ள­லாம் என்­றும் உலக திடல்­த­டக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!