ஸ்மித்: என்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்

சிட்னி: சிட்­னி­யில் 2015 உல­கக் கிண்­ண அரை­யி­று­திப் போட்டியில் 93 பந்­துகளில் 105 ஓட்­டங்­கள் அடித்­தது அநே­க­மாக என்­னு­டைய சிறந்த ஒரு­நாள் கிரிக்­கெட் இன்­னிங்­சாக இருக்­கும் என ஆஸ்திரேலியப் பந்தடிப்பாளர் ஸ்டீவ் ஸ்மித் தெரி­வித்­துள்­ளார்.

2015 ஆம் ஆண்டு நியூ­சி­லாந்து மற்­றும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 50 ஓவர் உல­கக் கிண்­ண கிரிக்­கெட் தொடர் போட்டி நடை­பெற்­றது.

சிட்­னி­யில் நடை­பெற்ற அரை­யி­று­தி­யில் இந்­தியா - ஆஸ்­தி­ரே­லியா அணி­கள் பலப்­ப­ரிட்சை நடத்­தின.

முத­லில் பந்­த­டித்த ஆஸ்­தி­ரே­லியா 7 விக்­கெட் இழப்­பிற்கு 328 ஓட்­டங்­கள் குவித்­தது. ஸ்டீவ் ஸ்மித் 93 பந்­துகளில் 105 ஓட்­டங்­கள் விளா­சி­னார்.

பின்­னர் 329 ஓட்­டங்­கள் அடித்­தால் வெற்றி என்ற இலக்­கு­டன் களம் இறங்­கிய இந்­தியா 233 ஓட்­டங்­களில் சுருண்டு 95 ஓட்­டங்­களில் தோல்­வி­யைச் சந்­தித்­தது.

இந்­தத் தொட­ரில் தொடர்ச்­சி­யாக ஐந்து முறை 50 ஓட்­டங்­க­ளுக்கு மேல் அடித்த ஸ்மித், இந்­தி­யா­வுக்கு எதி­ராக மட்­டும் சதம் அடித்­தார்.

“இது­தான் என்­னு­டைய சிறந்த ஒரு­நாள் கிரிக்­கெட் இன்­னிங்­சாக இருக்­கும்,” என ஸ்மித் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து ஸ்டீவ் ஸ்மித் கூறு­கை­யில் ‘‘அநே­க­மாக என்­னு­டைய சிறந்த ஒரு­நாள் இன்­னிங்ஸ் அது­வா­கத்­தான் இருக்­கும்.

“எனது சொந்த நாட்­டில், என்­னு­டைய நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் பார்க்க உல­கக் கிண்­ண அரை­யி­று­திப் போட்­டி­யில் நடப்பு வெற்­றி­யா­ளர் அணிக்கு எதி­ராக அந்­தச் சதம் கிடைத்­தது,’’ என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!