லிவர்பூல் சகாப்தம் டேல்கிலிஷுக்கு கிருமித்தொற்று

லண்­டன்: லிவர்­பூல் காற்­பந்­துக் குழு சகாப்­தம் கென்னி டேல்­கி­லி­ஷுக்கு (படம்) கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர். எனி­னும், அவ­ருக்கு எந்த அறி­கு­றி­யும் தென்­ப­ட­வில்லை.

ஸ்காட்­லாந்து நாட்­ட­வ­ரான 69 வயது டேல்­கி­லிஷ், தொற்­று­நோய் ஏற்­பட்­டி­ருப்­ப­தன் சந்­தே­கத்­தின் பேரில் கடந்த புதன்­கிழமை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

“அவ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்பது உறு­தி­செய்­யப்­பட்­டது,” என்று டேல்­கி­லிஷ் குடும்­பத்­தி­னர் நேற்று முன்­தி­னம் வெளிட்ட அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­ட­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கவே குறிப்­பிட்ட காலத்­திற்கு டேல்கிலிஷ் சுய­மாக தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­ட­தாக அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர்.

அர­சாங்­கம், நிபு­ணர்­க­ளின் வழி­காட்­டு­த­லைப் பின்­பற்றி நடக்­கு­மாறு அனை­வ­ரை­யும் டேல்­கி­லிஷ் வலி­யுறுத்­தி­ய­தாக அவ­ரது குடும்­பத்­தி­னர் கூறி­னர்.

ஸ்காட்­லாந்து குழு­வான செல்­டிக்­கில் விளை­யா­டிய டேல்­கி­லிஷ், நான்கு முறை அக்­குழு ஸ்காட்­டிஷ் லீக் கிண்­ணத்தை வெல்ல முக்­கிய பங்­காற்­றி­னார். 1977ஆம் ஆண்­டில் லிவர்­பூல் குழு­வில் இணைந்­தார்.

லிவர்­பூ­லுக்­காக அவர் விளை­யா­டிய 13 ஆண்டு கால­கட்­டத்­தில் எட்டு முறை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் கிண்­ணம், மூன்று முறை எஃப்ஏ கிண்­ணம், மூன்று முறை ஐரோப்­பிய கிண்­ணம் ஆகி­ய­வற்றை வென்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!