சுடச் சுடச் செய்திகள்

நிறவெறி உலகம் முழுவதும் உள்ளது: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டேரன் சமி

கிங்ஸ்­டன்: நிற­வெ­றிக்கு பலி­யான ஜார்ஜ் ஃபிளாயிட் விவ­கா­ரம் குறித்து பேசிய வெஸ்ட் இண்­டீஸ் முன்­னாள் கிரிக்­கெட் வீரர், இது மவு­னத்­துக்­கான நேர­மல்ல. நிற­வெறி, சமூக அநீ­தி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்க வேண்­டிய காலம் என அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்ள டேரன் சமி, “நிற­வெறி அமெ­ரிக்­கா­வு­டன் முடி­வ­டை­வ­தில்லை, இது உல­கம் முழுவ­தும் உள்­ளது.

"என் சகோ­த­ரன் கழுத்­தில், போலிஸ் ஒருவர் முட்­டிக் காலால் மிதித்த காணொ­ளியைப் பார்த்த பிறகு கிரிக்­கெட் உல­கம் இன்­னும் ஏன் மவு­னம் சாதிக்­கிறது.

"ஐசிசி மற்­றும் கிரிக்­கெட் வாரி­யங்­கள் என்னை போன்­ற­வர்­க­ளுக்கு என்ன நடக்­கிறது என்­பதை இன்­னுமா உண­ர­வில்லை?

"எங்­க­ளுக்­காக, கறுப்­பி­னத்­த­வ­ருக்­காக நீங்­கள் சமூக நீதி கேட்க மாட்­டீர்­களா? சமூக அநீ­தி­க­ளுக்கு எதி­ராக பேச மாட்­டீர்­களா?

"இது அமெ­ரிக்கா சம்­பந்­தப்­பட்­டது மட்­டு­மல்ல, இது அன்றாடம் நடக்­கிறது. இப்­போது மவு­னத்­துக்­கான நேர­மல்ல, நான் உங்­கள் குரல்­க­ளைக் கேட்க விரும்­பு­கி­றேன்,” என்று வேத­னை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon