ரோகித் சர்மா சிக்சர் சாதனை

மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்­கெட் போட்டி ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்­னி­யில் வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கி­யது. இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் மோதிக்­கொண்ட அந்த விளை­யாட்­டில் பூவா தலை­யா­வில் வென்ற ஆஸ்­தி­ரே­லிய அணி முத­லில் பந்­த­டித்­தது.

நிதா­ன­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய ஆஸ்­தி­ரே­லிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடி­வில் 55 ஓவர்­களில் 2 விக்­கெட்­டு­களை மட்­டும் இழந்து 166 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. ஸ்மித் 31 ஓட்­டங்­க­ளி­லும் லபு­‌‌ஷேன் 67 ஓட்­டங்­க­ளி­லும் களத்­தில் இருந்­த­னர்.

இந்­நி­லை­யில் நேற்று நடந்த இரண்­டா­வது ஆட்­டத்­தில், தொடர்ந்து ஆடிய ஆஸ்­தி­ரே­லியா சீரான இடை­வெ­ளி­யில் விக்­கெட்­டு­களை இழந்து தடு­மா­றி­யது. ஒரு­பு­றம் விக்­கெட் வீழ்ந்­தா­லும், மறு­பு­றம் நிலைத்து நின்ற ஸ்மித் சதம் கடந்து அசத்­தி­னார்.

கடைசி வரை களத்­தில் இருந்த ஸ்மித், 131 ஓட்­டங்­கள் எடுத்­தி­ருந்த நிலை­யில் ஆட்­டத்­தில் இருந்து வெளி­யே­றி­னார். இதன்­மூ­லம் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் முதல் இன்­னிங்ஸ் முடி­வுக்கு வந்­தது.

முதல் இன்­னிங்­சில் ஆஸ்­தி­ரே­லியா 105.4 ஓவர்­களில் 338 ஓட்­டங்­கள் எடுத்து அனைத்து விக்­கெட்­டு­களையும் இழந்­தது.

இதன்­பின்­னர் இந்­திய அணி முதல் இன்­னிங்சைத் தொடங்­கி­யது. துவக்க வீரர்­க­ளாக ரோகித் சர்மா, ஷுப்­மன் கில் கள­மி­றங்கி நிதா­ன­மாக விளை­யா­டி­னர்.

இந்­திய அணி தரப்­பில், ஜடேஜா 4 விக்­கெட்­டு­களை கைப்­பற்­றி­னார். பும்ரா, சைனி தலா 2 விக்­கெட்­டு­கள், சிராஜ் ஒரு விக்­கெட் வீழ்த்­தி­னர்.

இந்­தப் போட்­டி­யில் 16வது ஓவ­ரில் லயன் வீசிய பந்­தில் ரோகித் சர்மா அடித்த சிக்­சர் அவ­ருக்கு வர­லாறு படைக்க உத­வி­யது.

அனைத்­து­ல­கப் போட்­டி­களில் ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ராக அனைத்து நிலை­க­ளி­லும் சேர்த்து 100 சிக்­சர்­களை அடித்த முதல் கிரிக்­கெட் வீரர் என்ற பெரு­மையை ரோகித் சர்மா பெற்­றுள்­ளார்.

அவர் ஒருநாள் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ராக 63 சிக்­சர்­கள் விளா­சி­யுள்­ளார். இதுவே, 5 முறை உலக வெற்­றி­யா­ளர் பட்­டத்­தைப் பெற்ற ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்­சர்­கள் ஆகும்.

அவர் நேற்­றைய ஆட்­டத்­தில் அடித்த சிக்­ச­ரால், மொத்த சிக்­சர் எண்­ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்­ளது. கிரிக்­கெட் போட்­டி­யில் அதிக சிக்­சர் அடித்த இந்­திய வீரர் என்ற சாத­னையை அவர் பெற்­றுள்­ளார். அவ­ரது இந்த சிக்­ச­ருக்கு பின்­னர், அதிக சிக்­சர்­கள் அடித்­த­வர்­கள் வரி­சை­யில் மூன்­றா­வது இடத்­தில் உள்­ளார். வெஸ்ட் இண்­டீ­சின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்­தா­னின் ‌ஷாகித் அஃப்­ரிடி (476) ஆகி­யோர் ரோகித்­துக்கு முன்­னாள் அடுத்­த­டுத்து உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!