சிங்கப்பூர் குழுவுக்கு வெளிநாட்டு சவால்கள்

சிங்­கப்­பூர்: உல­கக் கிண்ண காற்­பந்து தகு­திச் சுற்­றுப் போட்­டி­க­ளுக்­கான பயிற்சி ஆட்­டங்­களில் சிங்­கப்­பூர் தேசிய காற்­பந்­துக் குழு ஈடு­பட்டு வரு­கிறது.

இதற்­காக பயிற்­று­நர் தட்­சுமா யோஷிடா தலை­மை­யி­லான சிங்­கப்­பூர் அணி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை துபாய் சென்று சேர்ந்­தது. இதற்­காக உள்­ளூர் பயிற்­சி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

தேசிய அணி­யின் கடைசி பயிற்சி ஆட்­டம் கடந்த மார்ச் மாதம் சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்­றது.

இன்று துபாய் ஜேஏ விளை­யாட்டு மையத்­தில் ஆப்­கா­னிஸ்­தான் அணி­யு­ட­னான பயிற்­சி­யில் சிங்­கப்­பூர் குழு ஈடு­படும். அங்­குள்ள வெப்­ப­நி­லையை 37 டிகிரி செல்­சி­யசை எட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த வெப்­ப­நி­லை­யில் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வது அடுத்த வாரம் சவூதி அரே­பி­யத் தலை­ந­கர் ரியாத்­தில் விளை­யாட இவர்­க­ளுக்கு கைகொ­டுக்­கும்.

கார­ணம் அங்கு வெப்­ப­நிலை அடுத்த வாரம் 40 டிகிரி செல்­சி­யசை நெருங்­கக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு உள்­ளது.

லயன்ஸ் குழு நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ரியாத் செல்­கிறது. குரூப் 'டி' யில் இடம்­பெற்­றுள்ள பாலஸ்­தீன அணி­யு­டன் ஜூன் 4ஆம் தேதி லயன்ஸ் மோதும். அடுத்­த­ப­டி­யாக உஸ்­பெ­கிஸ்­தா­னு­டன் ஜூன் 8ஆம் தேதி­யும் சவூதி அரே­பிய அணி­யு­டன் ஜூன் 12ஆம் தேதி­யும் இக்­குழு விளை­யா­டும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லுக்­குப் பின்­னர் முதன்­மு­றை­யாக லயன்ஸ் குழு வெளி­நாட்­டில் பயிற்சி ஆட்­டங்­களில் பங்­கேற்று வரு­கிறது.

சிங்­கப்­பூர் இளை­யர் குழு­வில் ஆடி வந்த இல்­ஹான் ஃபாண்டி பயிற்சி ஆட்­டத்­தில் பங்­கேற்­கி­றார். தேசிய அணி­யில் விளை­யாட வேண்­டும் என்ற தமது கனவு நிறை­வேறி இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

அவ­ரு­டைய சகோ­த­ரர்­கள் இக்­ஸான் ஃபாண்டி, இர்­ஃபான் ஃபாண்டி ஆகி­யோ­ரும் இதே குழு­வில் உள்­ள­னர்.

அதிக வெப்­ப­நிலை குறித்து லயன்ஸ் கோல் காப்­பா­ளர் ஹசன் சன்னி கூறு­கை­யில், "இங்­குள்ள வெப்­ப­நி­லையை மட்­டு­மின்றி எல்­லா­வித அம்­சங்­க­ளை­யும் சாத­க­மாக எடுத்­துக்­கொள்ள வேண்டி உள்­ளது. எங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு வெப்­ப­நி­லை­யைச் சரி­செய்­து­கொள்ள சில போட்­டி­கள் உத­வின.

"கடி­ன­மாக இருந்­த­போ­தி­லும் ஒவ்­வொரு வீர­ரும் எத­னை­யும் சந்­திக்­கும் மன­நி­லை­யில் உள்­ள­னர்," என்­றார்.

வெப்­ப­நி­லை­யைச் சமா­ளிப்­பது ஒரு­பக்­கம் இருப்­பி­னும் பய­ணம் தொடர்­பான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களும் அணிக்­குச் சவா­லாக இருந்து வரு­கிறது.

குறிப்­பாக, வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளின்­போது ஓர் அறை­யில் இரு வீரர்­கள் தங்­கு­வது வழக்­கம். அணி­யின் உத்தி குறித்து கலந்து பேச அது உத­வி­யாக இருக்­கும்.

தற்­போது அப்­படி இல்லை. ஒவ்­வொ­ரு­வ­ரும் தனித்­தனி அறை­யில் தங்­கு­வ­தால் உணவு வேளை­யின்­போ­தும் பயிற்சி ஆட்­டங்­க­ளின்­போ­தும் மட்­டுமே சந்­தித்­துக்­கொள்­ளும் நிைல ஏற்­பட்டு உள்­ளது.

40 டிகிரி வெப்பநிலை; கொள்ளைநோய் கட்டுப்பாடுகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!