நட்புமுறை ஆட்டத்தில் இத்தாலி கோல் மழை

காக்­லி­யரி, இத்­தாலி: யூரோ 2020 போட்­டிக்­குத் தன்­னைத் தயார்ப்

­ப­டுத்தி வரும் இத்­தாலி அணி நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நட்பு­ முறை ஆட்­டம் ஒன்­றில் எதி­ர­ணி­யான சேன் மரி­னோ­வைப் புரட்டி எடுத்­தது.

இத்­தா­லியின் பெரிய தீவு நக­ரான சார்­டி­னி­யா­வில் நடை­பெற்ற ஆட்­டம் தொடக்கம் முதல் முப்­பது நிமி­டங்­கள் வரை திகில் நிறைந்­த­தாக இருந்­தது.

மரினோ அணி­யி­ன­ரின் கோல் முயற்சி அனைத்­தை­யும் தடுக்­கும் முனைப்­பில் தீவி­ரம் காட்­டிய அதே­வேளை தங்­கள் தரப்பு கோல் மீதும் இத்­தாலி அணி­யி­னர் ஒரு கண் வைத்­தி­ருந்­த­னர்.

31வது நிமி­டத்­தில் அணித் தலை­வர் ஃபெடரிகோ பெர்­னார்­டெச்சி முதல் கோலைப் புகுத்தி ஆட்­டத்­தின் போக்கை மாற்­றி­னார்.

அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மரினோ வீரர்­கள் மீள்­வ­தற்­குள் அடுத்த மூன்­றா­வது நிமி­டத்­தில் இரண்­டா வது கோலை கியன் மார்கோ ஃபெராரி போட்­டார். இது அவ­ரது அறி­முக ஆட்­டம். இரண்­டா­வது பாதி ஆட்­டம் தொடங்­கிய நான்­கா­வது நிமி­டத்­தில் மேட்­டியோ பொரிட்­டா­னோ­வும் தனது வேகத்­தைக் காட்­டி­ய­தன் விளை­வாக மூன்­றா­வது கோல் விழுந்­தது.

அதற்கு அடுத்த இரு கோல்­

க­ளை­யும் ஆண்ட்­ரியா பெலோட்­டி­யும் மாட்­டியோ பெசி­னா­வும் போட 5-0 என்று இத்­தா­லி­யின் ஆக்­கி­ர­மிப்­பில் ஆட்­டம் செல்லத் தொடங் கியது. அந்த அணி­யி­ன­ரின் ஆக்­ரோ­ஷத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் மரி­னோ­வின் முயற்சி எது­வும் கைகூ­ட­வில்லை. அதற்­குள் பெலிட்­டோ­வின் இரண்டாவது கோலும் விழ, எண் ணிக்கை ஆறு ஆனது. ஆட்­டம் முடி­யும் தறு­வா­யில் பெசி­னா­வும் தமது இரண்­டா­வது கோலைப் புகுத்த 7-0 என்ற கணக்­கில் இத்­தாலி வென்­றது. அந்த அணி­யின் கோல் மழையை எதி­ர­ணி­யால் வேடிக்கை மட்­டுமே பார்க்க முடிந்­தது.

வரும் வெள்­ளிக்­கி­ழமை மற்­றொரு நட்பு முறை ஆட்­டத்­தில் செக் குடி­ய­ர­சு­டன் இத்­தாலி மோத­வி­ருக்­கிறது.

பின்­னர் நேர­டி­யாக யூரோ 2020 ஐரோப்­பிய வெற்­றி­யா­ளர் கிண்ண ஆட்­டத்­திற்­குள் நுழை­யும் இத்­தாலி, தொடக்க ஆட்­டத்­தில் துருக்­கி­யை­யும் பின்­னர் சுவிட்­சர்­லாந்­தை­யும் அதற்­க­டுத்து வேல்ஸ் அணி­யை­யும் சந்­திக்­கும். அனைத்து ஆட்டங் களும் ரோம் நகரில் நடைபெறும்.

யூரோ 2020 ஆட்டங்கள் ஜூன் 11ல் தொடங்கி ஜூலை 11 வரை நீடிக்கும்.

தம்மிடம் திறன்படைத்த ஆட்டக் காரர்கள் இருப்பதாக இத்தாலி பயிற்றுநர் ரோபர்ட்டோ மன்சினி மார்தட்டுகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!