துணிச்சலுக்கு வெகுமானம்

விலா­ரி­யால் (ஸ்பெ­யின்): துணிச்­சலான முடி­வு­களை எடுத்து பிரச்­சி­னை­யில் மூழ்­கிக்கிடந்த இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து அணி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட்டை மீண்­டும் வெற்­றி­பெ­றச் செய்­துள்­ளார் இதன் தற்­கா­லிக நிர்­வா­கி­யான மைக்­கல் கேரிக். யுயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யில் ஸ்பெ­யி­னின் விலா­ரி­யாலை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்று இரண்­டாம் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்­றது யுனை­டெட். கிரிஸ்­டி­யானோ ரொனால்டோ, ஜேடன் சாஞ்சோ ஆகி­யோர் கோல்­க­ளைப் போட்­ட­னர். முதன்­மு­றை­யாக யுனை­டெட்­டிற்­குக் கோல் போட்­டுள்­ளார் இவ்­வ­ணி­யில் புதி­தா­கச் சேர்ந்­துள்ள இங்­கி­லாந்து நட்­சத்­தி­ரம் சாஞ்சோ. “ஜேடனை (சாஞ்சோ) நினைத்து நான் மிக­வும் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்,” என்­றார் கேரிக். “மிக­வும் கடு­மை­யாக உழைத்­தார், என்­னைப் பொறுத்­த­வரை இவ்­வாட்­டத்­தில் தன்­னால் முடிந்­த­வரை சிறப்­பாக ஆடி­னார்,” என்று கேரிக் குறிப்­பிட்­டார்.

மிக­வும் மோச­மாக விளை­யா­டி­வந்­த­தால் சில நாட்­க­ளுக்கு முன் யுனை­டெட் நிர்­வாகி ஒலே குனா சோல்­ஷியா பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டார். அவ­ருக்­குத் துணை நிர்­வா­கி­யாக இருந்த மற்றொரு முன்­னாள் யுனை­டெட் வீரரான கேரிக் தற்­கா­லி­க­மாக இப்­பொ­றுப்பை வகிக்­கி­றார். நட்­சத்­தி­ரம் புரூனோ ஃபெர்­னாண்­டஸை கேரிக் ஆட்­டத்­தின் தொடக்­கத்­தி­லி­ருந்து விளை­யா­ட­வில்லை. இது, சோல்­ஷியா அடிக்­கடி செய்­யாத ஒன்று. மேலும் இது­வரை அதி­கம் விளை­யா­டா­தி­ருந்த ஆன்டனி மார்­சி­யால் ஆட்­டத்­தைத் தொடங்­கி­னார், பொது­வாக முன்­னிலை ஆட்­டக்­கா­ர­ரா­கக் கள­மிறங்­கும் ரொனால்டோ இம்முறை திட­லின் இடது புறத்­தில் விளை­யா­டி­னார். பிற்­பாதி­யில் ஃபர்­னாண்­டெஸ் ஆட்­டத்­திற்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டார்.

குறிப்­பாக ஆட்­டத்­தின் கடைசி 20 நிமி­டங்­களில் யுனை­டெட்­டி­டம் மீண்­டும் பழைய உத்­வே­கத்தை ஓர­ளவு காண முடிந்­தது. “கடந்த இரண்டு நாட்­கள் அணி­யில் இருக்­கும் எல்­லோ­ருக்­கும் வருத்­தம் தரும் வகை­யில் அமைந்­த­து­டன் இந்த வெற்­றியை சோல்­ஷி­யா­விற்கு சமர்ப்­ப­ணம் செய்­வது போன்ற ஓர் உணர்வு இருந்­தது,” என்று கேரிக் தனது முன்­னாள் நிர்­வா­கி­யைக் கெள­ர­வித்­தார். மிக­வும் சிக்­க­லான நிலை­மையை நன்கு கையாண்­டார் கேரிக்.

கடந்த சில வாரங்­க­ளா­கத் தனது வலைக்­குள் நீர் போல் கோல்­களை ஓட­விட்ட யுனை­டெட்­டின் தற்­காப்பு விளை­யாட்­டா­ளர்­கள் இவ்­வாட்­டத்­தில் மிகுந்த கவ­னத்­து­டன் விளை­யாடி ஒரு கோலும் விழா­மல் பார்த்­துக்­கொண்­ட­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!