லிவர்பூலின் புதிய நட்சத்திரம்

லிவர்பூல்: இங்­கி­லாந்து பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் லிவர்­பூல் அணி பல­ரை­யும் அசத்தி வரு­கிறது. இந்­தப் பரு­வத்­தில் அந்­தக் குழு விளை­யா­டிய அனைத்து ஆட்­டங்­க­ளி­லும் கோல் போடத் தவ­ற­வில்லை. அத்­து­டன், கடந்த 17 ஆட்­டங்­களில் ஒவ்­வோர் ஆட்­டத்­தி­லும் இரண்டு கோல்­கள் போட்­டுள்­ள­து. இது கடந்த 100 ஆண்­டு­களில் உயர்­நிலை காற்­பந்­துப் பிரி­வில் ஒரு குழு­வின் ஈடு இணை­யற்ற சாதனை என்று கூறப்­ப­டு­கிறது.

அது மட்­டு­மல்ல, பிரி­மி­யர் லீக்­கில் இது­வரை விளை­யா­டிய 13 ஆட்­டங்­களில் லிவர்­பூல் 39 கோல்­கள் போட்­டுள்­ள­தும் ஒரு சாதனை.

லிவர்­பூல் அணி­யின் மிகச் சிறப்­பான ஆட்ட பாணி­யில் அதன் புதிய நட்­சத்­தி­ர­மான டியோகோ ஜோட்­டா­வுக்கு பெரும் பங்­குண்டு.

நேற்று செளத்­ஹேம்­ட­னு­ட­னான ஆட்­டத்­தில் லிவர்­பூல் 4-0 என்ற கோல் கணக்­கில் வென்­றது. இதில் இரண்டு கோல்­கள் ஜோட்டா போட்­டது. மற்ற இரண்டு கோல் கள் தியாகோ அல்­காண்ட்ராவும் வெர்­ஜில் வான் டைக்­கும் போட் டவை. பல கால­மாக லிவர்­பூ­லின் மூன்று தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­க­ளாக சாலா, சாடியோ மானே, ஃபெர்மினோ செயல்­பட்டு வந்த நிலை­யில், தற்­போது ஃபெர்மி­னோ­வின் இடத்தை ஜோட்டா பிடித்­துக்கொண்­டுள்­ளார்.

லிவர்­பூ­லின் மற்ற இரு தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­க­ளான சாலா, சாடியோ மானே இரு­வ­ரும் தங்­கள் வேகத்­தி­னா­லும் பந்தை கையா­ளும் லாவ­கத்­தி­னா­லும் ஒரு பக்­கம் அசத்து­கி­றார்­கள்.

இவர்­கள் இரு­வ­ருக்­கும் ஈடு­கொ­டுத்து குறி பார்த்து கோல் போடும் திற­மை­யு­டன் விளங்­கு

­கி­றார் ஜோட்டா. இதில் தாக்­கு­தல் வீர­ராக மைதா­னத்­தின் இடம், வலம், நடு என எந்­தப் பகு­தி­யி­லும் தாக்கும் திறமையுடன் விளங்குவது இவரது சிறப்பு அம்­சம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!