போகாத ஊருக்கு வழிதேடிய போர்ச்சுகீசிய குழு

போர்ச்சுகல்: காற்­பந்­தாட்­டம் பொது­வாக ஓர் அணி­யில் 11 ஆட்­டக்­கா­ரர்­க­ளைக் கொண்டு விளை­யா­டு­வது. அது­போல் அணிக்கு அணி ஏழு வீரர்­க­ளைக் கொண்டு ‘செவன் எ சைட்’ என்று விளை­யா­டு­வ­தும் உண்டு. ஆனால், 11 பேர் கொண்ட ஒரு குழு­வுக்கு எதி­ராக 9 வீரர்­க­ளைக் கள­மி­றக்கி ஆட வைத்­துப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா. அப்­படி ஒரு விந்தை போர்ச்­சு­கல் நாட்­டில் இடம்­பெற்­றது. கொவிட்-19 கொள்ளைநோய் கிருமி பெலன்­சஸ் என்ற குழு­வைப் பதம் பார்க்க அத­னால் பென்­ஃபிக்கா குழு­வுக்கு எதி­ராக ஒன்­பது வீரர்­களை மட்­டுமே கள­மி­றக்க முடிந்­தது.

அந்த ஒன்­பது வீரர்­களில் இரு­வர் கோல்­காப்­பா­ளர்­கள், திடல் விளை­யாட்டு வீரர்­கள் அல்­லர். இதில் எப்­ப­டியோ முதல் பாதி ஆட்­டத்­தில் 7 கோல்­கள் வாங்­கி­யும் சமா­ளித்த பெலன்­சஸ் குழு­வால் இரண்­டாம் பாதி ஆட்­டத்­திற்கு ஆட்­டத்தை தொடங்­கிய ஒன்­பது வீரர்­க­ளுக்கு பதி­லாக ஏழு வீரர்­களை மட்­டுமே கள­

மி­றக்க முடிந்­தது. பின்­னர், அதி­லும் ஒரு­வர் காயம் கார­ண­மாக விளை­யாட முடி­யா­மல் போகவே எஞ்­சி­யி­ருந்தது அறு­வர்­தான். இதைப் பார்த்த நடு­வர் ஆட்­டத்தை உட­ன­டி­யாக நிறுத்தி இந்த சோகத்திற்கு முடிவு கட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!