பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கம் இல்லாமல் போனது

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய

விளை­யாட்­டு­க­ளுக்­கான மேசைப்­பந்­துப் போட்­டி­யில் ஆண்­கள், பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வுகளில் சிங்­கப்­பூர் தங்­கம் வெல்­லத் தவ­றி­யது.

2019ஆம் ஆண்டு தென்­கி­ழக்­காசிய விளை­யாட்­டு­களில்

அப்­பி­ரி­வுகளில் சிங்­கப்­பூர் தங்­கம் வென்­றி­ருந்­தது.

அத­னால் இம்­மு­றை­யும் அப்பிரிவுகளில் சிங்­கப்­பூர் அணி தங்­கத்­தைத் தனக்­குச் சொந்­த­மாக்­கிக்­கொள்­ளும் என்று பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் ஒற்­றை­யர் பிரி­வில் கள­மி­றங்­கிய இரண்டு சிங்­கப்­பூர் வீரர்­களும் இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறத் தவ­றி­னர்.

கிளே­ரன்ஸ் சியூ, செங் ஜியான் ஆகி­யோர் நேற்று நடை­பெற்ற

அரை­யி­றுதி ஆட்­டங்­களில் தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கி­னர்.

சொந்த மண்­ணில் முனைப்­

பு­டன் விளை­யா­டிய வியட்­னா­மிய வீர­ரி­டம் சிங்­கப்­பூ­ரின் கிளே­ரன்ஸ் சியூ தோற்­றார்.

பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வின் அரை­யி­று­தி­யில் தாய்­லாந்து வீராங்­க­னை­யி­டம் செங் ஜியான் தோல்­வி­யைத் தழு­வி­னார்.

இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் மேசைப்­பந்­துக் குழு இரண்டு தங்­கப் பதக்­கங்­கள், மூன்று

வெள்­ளிப் பதக்­கங்­கள், மூன்று வெண்­க­லப் பதக்­கங்­கள் ஆகி­ய­வற்­று­டன் நாடு திரும்­பு­கிறது.

ஆண், பெண் ஒற்­றை­யர் பிரி­வில் இரண்டு தங்­கப் பதக்­கங்­களை வெல்­லும் இலக்­கு­டன் இருந்த சிங்­கப்­பூர் குழு­வுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் மற்ற பிரிவுகளில் அது பதக்கங்களை அள்ளி பெருமிதம் அடைந்துள்ளது.

ஆண்­க­ளுக்­கான இரட்­டை­யர் பிரி­வில் கிளே­ரன்ஸ் சியூ, ஈத்­தன் போ ஜோடி தங்­கம் வென்­றது.

மூன்றாவது முறையாக இப்பிரிவில் அவர்கள் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் சிங்­கப்­பூ­ருக்கு தங்கமும் வெள்ளியும் கிடைத்­தன.

சிங்கப்பூரின் மகளிர் மேசைப்பந்து அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய செங் ஜியான் வெண்கலம் வென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!