இன்று கடைசிப் போட்டி

கிரிக்கெட்: தினேஷ் கார்த்திக் அதிரடியில் இந்தியா எளிதாக வெற்றி

ராஜ்­கோட்: தினேஷ் கார்த்­திக்­கின் அதி­ர­டிப் பந்­த­டிப்­பும் பந்­து­வீச்­சா­ளர்­க­ளின் சிறப்­பான செயல்­பா­டும் தென்­னாப்­பி­ரிக்­கா­விற்கு எதி­ரான நான்­கா­வது டி20 கிரிக்­கெட் போட்டி­யில் இந்­திய அணி­யின் வெற்­றிக்கு வித்­திட்­டன.

இத­னை­ய­டுத்து, தொடர் 2-2 எனச் சம­நிலை கண்­டது. தொடரை வெல்­லப்­போ­வது யார் என்­பதை முடி­வு­செய்­யும் ஐந்­தா­வது, கடை­சிப் போட்டி இன்­றி­ரவு பெங்­க­ளூ­ரில் இடம்­பெ­று­கிறது.

முத­லிரு போட்­டி­க­ளைத் தென்­னாப்­பி­ரிக்கா வென்ற நிலை­யில், எஞ்­சிய மூன்று போட்­டி­க­ளி­லும் வென்­றால் மட்­டுமே தொட­ரைத் தன்­வ­யப்­ப­டுத்த முடி­யும் என்ற நெருக்­கடி இந்­திய அணிக்கு. இத்­த­கைய சூழ­லில், மூன்­றா­வது போட்­டி­யில் ருது­ராஜ் கெய்க்­வாட்­டும் யுஸ்­வேந்­திர சக­லும் கைகொ­டுக்க, இந்­திய அணி தொட­ரில் தனது வெற்­றிக் கணக்­கைத் தொடங்­கி­யது.

இந்­நி­லை­யில், ராஜ்­கோட்­டில் நேற்று முன்­தி­னம் இரவு நடந்த நான்­கா­வது போட்­டி­யில் பூவா தலை­யா­வில் வென்ற தென்­னாப்­பி­ரிக்கா முத­லில் பந்­து­வீ­சி­யது.

இத­னை­ய­டுத்து, ருது­ரா­ஜும் இஷான் கிஷ­னும் இந்­திய அணி­யின் தொடக்­கப் பந்­த­டிப்­பா­ளர்­களாகக் கள­மி­றங்­கி­னர். முந்­திய போட்டி­யில் அரை­ச­தம் விளா­சிய ருது­ராஜ் இம்­முறை ஐந்து ஓட்­டங்­களுக்கு ஆட்­ட­மி­ழந்­தார். அடுத்­த­தாக வந்த ஷ்ரே­யாஸ் ஐய­ரும் நான்கு ஓட்­டங்­க­ளு­டன் மன­நி­றைவு அ­டைந்து, ஓய்­வறை திரும்­பி­னார்.

அணித்­த­லை­வர் ரிஷப் பன்ட் 17 ஓட்­டங்­க­ளி­லும் இஷான் 27 ஓட்­டங்­க­ளி­லும் ஆட்­ட­மி­ழக்க, இந்­திய அணி 81 ஓட்­டங்­க­ளுக்கு நால்­வ­ரைப் பறி­கொ­டுத்­துத் தத்­த­ளித்­தது. இந்த நிலை­யில் ஹார்­திக் பாண்­டி­யா­வு­டன் மூத்த ஆட்­டக்­கா­ரர் தினேஷ் கார்த்­திக் இணைய, கடைசி ஐந்து ஓவர்­களில் இந்­திய அணி­யின் ஓட்ட எண்­ணிக்கை விறு­வி­று­வென உயர்ந்­தது.

ஹார்­திக் 31 பந்­து­களில் 46 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். கார்த்­திக் 27 பந்­து­களில் 55 ஓட்­டங்­களை விளா­சி­னார். இதுவே, அனைத்­துலக டி20 போட்­டி­களில் அவ­ருக்கு முதல் அரை­ச­தம். இறு­தி­யில், 20 ஓவர் முடி­வில் இந்­திய அணி ஆறு விக்­கெட் இழப்­பிற்கு 169 ஓட்­டங்­களைச் சேர்த்­தது.

இரண்­டா­வ­தா­கப் பந்­த­டித்த தென்­னாப்­பி­ரிக்கா அணி மள­ம­ள­ வென விக்­கெட்­டு­களை இழந்­தது. அணித்­த­லை­வர் டெம்பா பவுமா, ஆவேஷ் கான் பந்­து­வீச்­சில் காயம் அ­டைந்து வெளி­யே­றி­னார். இறுதி­யில் அவ்­வணி 87 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்து, 82 ஓட்ட வித்­தி­யா­சத்­தில் மண்­ணைக் கவ்­வி­யது.

டி20 போட்­டி­களில் அவ்­வ­ணி­யின் ஆகக் குறை­வான ஓட்ட எண்­ணிக்கை இது­தான்.

ஆவேஷ் எதி­ர­ணி­யின் நான்கு ஆட்­டக்­கா­ரர்­களை வெளி­யேற்­றி­னார். கார்த்­திக் ஆட்ட நாய­க­னாக அறி­விக்­கப்­பட்­டார்.

இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு

இந்­நி­லை­யில், ஹார்­திக், கார்த்­திக் என நடு­வ­ரி­சைப் பந்­த­டிப்­பா­ளர்­களும் ஆவேஷ் கான், ஹர்­ஷல் பட்­டேல், யுஸ்­வேந்­திர சகல் எனப் பந்­து­வீச்­சா­ளர்­களும் சிறந்த ஆட்­டத்­தி­ற­னு­டன் இருப்­ப­தால் இன்றைய கடை­சிப் போட்­டி­யில் இந்­திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதி­கம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. இன்று இரவு 9.30 மணிக்குப் போட்டி தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!