மாமல்லபுரம்: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் வெற்றிப் பாதையில் தொடர்கிறார். ஆறு சுற்றுகளில் விளையாடிய அவர், அவை அனைத்தையும் கைப்பற்றினார்.
நேற்று நடைபெற்ற ஏழாவது போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூடினார். கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் குகேஷ் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தியப் பொதுப் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.