கிரிக்கெட்: இந்திய மகளிருக்கு வெள்ளி

பர்­மிங்­ஹம்: காமன்­வெல்த் போட்­டி­யில் மக­ளி­ருக்­கான கிரிக்­கெட் இறுதி ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­டம் 9 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் இந்­திய அணி தோல்­வி­யின் பிடி­யில் சிக்கி தங்­கம் வெல்­லும் வாய்ப்பை நழு­வ­விட்­டது.

பூவா தலை­யா­வில் வென்ற ஆஸ்­தி­ரே­லிய அணி முத­லில் பந்­த­டித்­தது. இதை­ய­டுத்து களம் இறங்­கிய அந்த அணி­யின் வீராங்­க­னை­களில் பெத் மூனி ஆக அதி­க­மாக 61 ஓட்­டங்­கள் குவித்­தார்.

அணித் தலை­வர் மெக் லானிங் 36 ஓட்­டங்­களும் ஆஷ்லே கார்ட்­னர் 25 ஓட்­டங்­களும் எடுத்­த­னர்.

20 ஓவர் முடி­வில் ஆஸ்­தி­ரே­லிய மக­ளிர் அணி 8 விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 161 ஓட்­டங்­கள் எடுத்­தது.

இதை­ய­டுத்து 162 ஓட்­டங்­கள் இலக்கை நோக்கி இந்­திய அணி களம் இறங்­கி­யது.

அதி­க­பட்­ச­மாக அணித் தலை­வர் ஹர்­மன்­பி­ரித் கவுர் 65 ஓட்­டங்­கள் குவித்­தார்.

ஜெமிமா ரோட்­ரிக்ஸ் 33 ஓட்­டங்­­களும் தீப்தி சர்மா 13 ஓட்­டங்­களும் சபாலி வர்மா 11 ஓட்­டங்­களும் எடுத்­த­னர்.

19.3 ஓவர் முடி­வில் இந்­திய அணி 152 ஓட்­டங்­கள் எடுத்து அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது.

ஆட்­டத்­தைக் கைப்­பற்­றிய ஆஸ்­தி­ரே­லியா தங்­கப் பதக்­கத்தை வென்­றது.

இறுதிவரை போராடி இந்திய மகளிர் வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை முடித்துக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!