எளிமையான தமிழில் மழலையர் நூல்கள்

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா 2022 - உடன் இணைந்து, ஆர்யா கிரி­யே­ஷன்ஸ் தமிழ்ப் புத்­தக நிலை­யத்­தின் ஆத­ர­வில் 5/11/22 அன்று 'பாப்­பாப் பாட்டு' நூல்­கள் வெளி­யீடு கண்­டன. மழ­லை­ய­ருக்­கான நூல்­க­ளின் தேவை அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கும் இவ்­வே­ளை­யில் நமது பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளை­யும், நம் நாட்­டின் சூழ­லுக்­கேற்ப எளி­மை­யான நடை­யில் சிறு­வர்­க­ளைக் கவ­ரும் வடி­வில் படைத்­தி­ருக்­கி­றார் கவி­ஞர் இராம வயி­ர­வன். தேசிய கலை­கள் மன்­றத்­தின், 'தி புளூ' அறை­யில் காலை 11.30 மணிக்கு, திரு­மதி சுந்­தரி சாத்­தப்­பன் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடி நிகழ்ச்­சி­யைத் துவங்கி வைத்­தார்.

ஆண்­டர்­சன் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் முரு­க­வேல் இலக்­கியா, சஞ்­சனா செந்­தில்­வேல் மற்­றும் சச்­சின் ஆதித் ஆகி­யோர், தொகுதி ஒன்­றின் நூல் அறி­மு­கத்தை, தாத்தா தன் பேத்­தி­க­ளுக்கு, நூலில் இடம்­பெற்ற பாடல்­களை விளக்­கு­வ­தாக, குறு­நா­டக வடி­வில் படைத்­தது பார்­வை­யா­ளர்­க­ளைப் பெரி­தும் ஈர்த்­தது. தொடக்­க­நிலை மாண­வர்­கள் ஸ்ருதி சாத்­தப்­பன், சக்தி நாச்­சி­யப்­பன் மற்­றும் ஷ்ராதா ஆகி­யோர் தொகுதி இரண்­டில் இடம்­பெற்ற பாடல்­களில் தங்­க­ளுக்­குப் பிடித்த பாடல்­களை, ராகத்­தோடு பாடி அசத்­தி­னார்­கள்.

பெற்­றோ­ருக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் இடையே புரிந்­து­ணர்­வுக்கு வழி­வ­குக்­கும் வகை­யில் அமைந்­துள்ள பாடல்­களை வலி­யு­றுத்­தும் வகை­யில் ஒரு காட்­சியை அமைத்து, அதைத் தன் மகன் அர்­ஜுன் ஆனந்­து­டன் சிறப்­பாக நடித்­தும் காட்­டி­னார் எழுத்­தா­ளர் சங்­கீதா கந்­த­சாமி.

ஆசி­யான் கவி­ஞர் க.து.மு.இக்­பால் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு முதல் நூலை வெளி­யிட்­டார். பெரி­ய­வர்­க­ளின் கவ­னத்­தை­யும் ஈர்க்­கும் விதத்­தில் நவீ­ன­மும் புது­மை­யும் கலந்து பாடல்­க­ளுக்­கான படங்­களை வரைந்து தந்த ஓவி­யர் திரு­மதி ராஜ்­ஸ்ரீ விஜ­யன், முதல் நூலைப் பெற்­றுக்­கொண்­டார்.

தனது ஏற்­பு­ரை­யில், இந்த நூலின் தயா­ரிப்­புக்கு முக்­கிய கார­ணம் நோய்த்­தொற்­றுக் காலத்­தில் தன்­னு­டைய பேத்­திக்கு நூல்­களை வாசித்­துக் காட்­டும் ஆர்­வத்­தில் நூல­கத்­திற்­குச் சென்று மழ­லை­ய­ருக்­கான நூல்­களை இர­வல் பெற்று வந்­த­தா­க­வும், அப்­போது சிங்­கப்­பூர் சூழ­லில் எழு­தப்­பட்ட தமிழ் நூல்­கள் மிகக் குறை­வாக இருப்­ப­தைத் தான் உணர்ந்­த­தா­க­வும் தானே குழந்­தை­க­ளுக்­கான நூல்­களை ஏன் தயா­ரிக்­கக்­கூ­டாது என்று தோன்­றி­ய­தன் விளை­வாக 'பாப்­பாப் பாட்டு' நூல்­கள் உரு­வா­னது என்­றார் நூலா­சி­ரி­யர் திரு இராம வயி­ர­வன். நிகழ்ச்­சியை செவ்­வனே நெறிப்­ப­டுத்­தி­னார் திரு­மதி பிர­தீபா வீர­பாண்­டி­யன்.

"பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்­காக உள்­ளூர் சூழ­லில் எழு­தப்­பட்ட நூல்­கள் இருக்­கின்­ற­னவா எனத்­தே­டும், பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள் பல­ரின் தேட­லுக்­கான விடை­யாக மலர்ந்­தி­ருக்­கின்­றன 'பாப்­பாப் பாட்டு' நூல்­கள்.

"இத்­த­கைய நூல்­கள் இன்­னும் பல எழு­தப்­பட வேண்­டும்," என்று நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த ஆர்யா கிரி­யே­ஷன்ஸ் நிறு­வ­னர் திரு­மதி பிரேமா மகா­லிங்­கம் கூறி­னார்.

செய்தி, படம்: ஆர்யா கிரி­யே­ஷன்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!