மெஸ்ஸிக்கு அடுத்து ராமோஸ்

பாரிஸ்: நட்­சத்­திர காற்­பந்து ஆட்­டக்­கா­ரர் லய­னல் மெஸ்­ஸி­யைத் தொடர்ந்து ஸ்பா­னி­யக் குழு­வின் முன்­னாள் தலை­வர் செர்­ஜியோ ராமோ­சும் (படம்) இப்­ப­ரு­வத்­து­டன் பிரெஞ்­சுக் குழு­வான பிஎஸ்­ஜி­யை­விட்டு வெளி­யே­ற­வுள்­ளார்.

இதனை பிஎஸ்ஜி குழுவே அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இன்று அதி­காலை கிளெர்மோ குழு­விற்கு எதி­ராக இடம்­பெ­ற­வி­ருந்த பிரெஞ்சு லீக் ஆட்­டமே பிஎஸ்ஜி குழு­விற்­காக 37 வயது ராமோஸ் விளை­யா­டிய கடைசி ஆட்­ட­மாக இருந்து இருக்­கும்.

கடந்த 2005ஆம் ஆண்­டில் இருந்து 2021ஆம் ஆண்­டு­வரை ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட் குழு­விற்கு வந்த ராமோஸ், சென்ற இரு பரு­வங்­க­ளாக பிஎஸ்ஜி சார்­பில் விளை­யாடி வரு­கி­றார்.

இந்த இரு பரு­வங்­க­ளி­லும் பிஎஸ்ஜி குழு, பிரான்­சின் ‘லீக் 1’ பட்­டத்­தைக் கைப்­பற்­றி­யது.

ராமோஸ் நேற்­று­வரை பிஎஸ்­ஜிக்­காக 57 ஆட்­டங்­களில் ஆடி­யுள்­ளார். அவ­ரது ஒப்­பந்­தம் இம்­மா­தம் 30ஆம் தேதி­யு­டன் முடி­கிறது.

“என்­னு­டைய வாழ்­வின் இன்­னொரு கட்­டத்­தி­லி­ருந்து விடை­பெ­று­கி­றேன்,” என்று ராமோஸ் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணம் வென்ற ஸ்பா­னிய அணி­யில் ராமோஸ் இடம்­பெற்­றி­ருந்­தார்.

மெஸ்­ஸி­யும் இவ­ரும் ஒரே பரு­வத்­தில் பிஎஸ்­ஜி­யு­டன் இணைந்த நிலை­யில், அக்­குழு­விற்­காக சாம்­பி­யன்ஸ் லீக் பட்­டத்தை வென்­று­தர முடி­யா­மலேயே அங்­கி­ருந்து இருவரும் வெளி­யே­று­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!