கிளமென்டியில் மிகுதியான கிறிஸ்மஸ் அலங்காரம்; அகற்றக்கோரிய நகர மன்றம்

கிளமென்டி புளோக் 351ல் வசிக்கும் குடியிருப்பாளரிடம் வீட்டிற்கு வெளியே ஜோடிக்கப்பட்ட கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு ஜூரோங்-கிளிமென்டி நகர மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் எழாம் தேதியில் குடியிருப்பாளர் ஒருவர் அமைத்த அலங்காரங்கள் இந்தப் புளோக்கின் இரண்டாம் மாடி வெளித்தளத்தில் காணப்பட்டது. ஒரு பெண் பொம்மையை இலைகள், நட்சத்திரங்களுடன் அலங்கரித்து அதற்குப் பக்கத்தில் வண்ண வண்ண பந்துகள் வைக்கப்பட்டிருந்தன.

'ஸ்டோம்ப்' இணையத்தள வாசகர் இந்த அலங்காரங்களின் புகைப்படங்களை அதிகாரிகளிடம் அனுப்பிய அதே சமயம் அந்தப் பகுதியில் நடமாடும் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்தும் அக்கறைத் தெரிவித்திருந்தார்.

இதுக் குறித்து ஜூரோங்-கிளமென்டி நகர மன்றம் அதிகாரிகள் ஆலோசனைக் கூற அலங்காரங்களை இடமாற்றம் செய்ய குடியிருப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

 

செய்தி, படம்: ஸ்டோம்ப்