திரையிசைப்பாடல் வழி இலக்கியம், வாழ்வியல்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

அடை­யா­ளம் என்­பது ஒரு­வர் பேசும் மொழி, அவ­ரது பண்­பாடு, அவர் கொண்­டுள்ள விழு­மி­யங்­கள் என்றும் அவையே மனி­தனை உலகத்­திற்கு அறி­மு­கப்­ப­டுத்­தும் வேர்­கள் என்­பதும் அண்டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயி­லும் தமிழ் விருப்­பப்­பாட மாண­வர்­களின் ஆணித்தரமான கருத்து.

"வேரில்­லாத மரம் வீழ்ந்து

விடும். மரம் மண்ணில் உறுதியாக நிற்­ப­தற்கு வேர்­ மண்ணுக்குள் ஆழமாகச் சென்று உறு­தி­யாக இருப்­பது அவ­சி­யம். மனி­தன் வாழ்க்­கை­யில் தழைத்­தோங்க அவ­னது வேர்­கள் ஆழமாக இருப்­பது அவ­சி­யம்," என்­ற­னர் அவர்­கள்.

'தமிழ்த் திரை­யி­சைப்­பா­டல்­கள் வழி இலக்­கி­ய­மும் வாழ்­வி­யல் கருத்து­களும்' எனும் தலைப்­பில் 'ஸூம்' மெய்­நி­கர் தளத்­தில் சுவை­யான முத்­த­மிழ் நிகழ்ச்­சியை நடத்தி­னர் அந்­தத் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள்.

தமிழ்­மொழி விழா­வின் புதிய பங்­கா­ளித்­துவ அமைப்­பாக இவ்வாண்டு இணைந்­துள்ள அண்டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூரி, கடந்த மாதம் 24ஆம் தேதி இயல், இசை, நாடக அங்­கங்­க­ளு­டன் இலக்­கிய நிகழ்ச்­சியை இணைய மேடை­யில் ஏற்­றி­யது.

கிட்­டத்­தட்ட 30 மாண­வர்­க­ளின் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­யால் நடை­பெற்ற அந்த நிகழ்ச்­சி­யில் கதா­காலட்­சே­பம், வில்­லுப்­பாட்டு, சிற்­றுரை, நட­னம், பாடல் எனப் பல அம்­சங்­கள் இடம்­பெற்­றன.

தமிழ்த் திரை­யி­சைப்­பா­டல்­களில் புதைந்­துள்ள கருத்­து­களை விளக்­கங்­க­ளு­டன் பகிர்ந்­த­னர் மாண­வர்­கள்.

பாலின சமத்­து­வம், உற­வு­க­ளின் முக்­கி­யத்­து­வம், அன்­பின் முக்­கி­யத்­து­வம், இன நல்­லி­ணக்­கம், பிரச்­சி­னை­க­ளின் கார­ணங்­களை ஆராய்ந்து தீர்­வு­காண்­ப­தன் அவ­சி­யம், இயற்­கைப் பாது­காப்பு, தன்­னம்­பிக்கை, ஆற்­றல், மனதை நல்

வழிப்­ப­டுத்­து­வது முத­லிய கருத்­து­க­ளுக்கு பல்­வேறு பாடல்­களை மாண­வர்­கள் மேற்­கோள் காட்­டி­னர். அந்­தக் கருத்­து­கள் மூலம் ஒரு­வர் தங்­க­ளின் வாழ்க்­கையை, வாழும் முறையை மேம்­ப­டுத்­திக்­கொள்­வது குறித்­தும் விளக்­க­ம­ளித்­த­னர்.

தமிழ் மொழி­யின் பெரு­மை­யை­யும் அதைக் கட்­டிக்­காத்து பயன்

படுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் இலக்­கிய படைப்­பு­க­ளின் வழி ஆணித்­த­ர­மாக அவ்­வி­ளை­யர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.

தமி­ழில் பேச முயற்சி செய்­வோ­ரைப் பாராட்ட வேண்­டும்; ஊக்­கு­விக்க வேண்­டும் என்­றும் எந்த மொழி­யை­யும் கற்­றுக்­கொள்­ளும் அதேவேளை­யில் தாய்மொழியான தமிழ்­மொ­ழியைக் காத்­துக்­கொள்ள வேண்­டும் என்றும் கருத்­து­ரைத்­தனர்.

"நம்ம மொழி­யில பேச பெரு­மைப்­ப­ட­ணும். தமி­ழன்னா தலை நிமிர்ந்து நிக்­க­ணும். தமிழ் இனி­மை­யான மொழி. கம்­பீ­ர­மான மொழி. காலத்­திற்­கேற்ப மாறும் மொழி­யும்­கூட. மூத்த மொழி. பல­ரா­லும் போற்­றப்­ப­டு­கிறது. மாற்­றங்­க­ளைக் கண்­டி­ருந்­தும் உயர்ந்து நிற்­கிறது," என்­பது போன்ற முத்­தான கருத்­து­களை அவர்­கள் பகிர்ந்­த­னர்.

"நமது மொழியை நாம் கொண்­டா­டி­னால்­தானே தொடர்ந்து அது வாழும். எப்­படி தேடத்­தேட பொருள் சேருமோ அதைப் போலத்­தான் தமிழ் அறி­வும். தேட­ணும், அப்­போ­து­தான் தமி­ழைத் துய்ப்­பது தொடர்­பான தெளி­வைப் பெற முடி­யும்," என்ற வச­னத்தை கதா­கா­லட்­சேப அங்­கத்­தில் குறிப்­பிட்­ட­னர் குரு, ‌சி‌ஷி­யர் 1, ‌சி‌ஷி­யர் 2 என வேட­மிட்ட செல்­வ­கு­மார் ‌சத்தியா ஸ்ரீ, திவ்­ய­ஸ்ரீ கிரு­‌ஷ்­ண­மூர்த்தி, ருஃபைதா சையத் இப்­ரா­ஹிம்.

சங்க இலக்­கி­யத்­தை­யும் திருக்­கு­ற­ளை­யும் விளக்கி, அந்­தக் கருத்­து­கள் திரை­யி­சைப்­பா­டல்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட விதத்தை ரெத்­தி­னம் ரெபேக்கா, ஸஹானா ஞானா­னந்­தம், மோனி­‌‌‌ஷா­சக்தி ‌‌சண்­மு­க­சுந்­த­ரம், அடைக்­கப்­பன் வள்­ளி­யம்மை ஆகி­யோர் பாடிக் காட்­டி­னர்.

சிற்­றுரை அங்­கத்­தில் மகா­கவி பார­தி­யார், கவி­ய­ரசு கண்­ண­தா­சன், கவிப்­பே­ர­ரசு வைர­முத்து போல வேட­மிட்டு உரை­யாற்­றி­னர் சரண்யா மு‌சிலா, லாவண்யா கணே­சன் கிருத்­திக்­கேஷ், வை‌ஷ்­ணவி ராம­நா­தன்.

ஒவ்­வொரு சிற்­று­ரைக்­குப் பின்­ன­ரும் அந்­தந்த கவி­ஞர்­கள் இயற்­றிய பாடல் ஒன்­றுக்கு நட­ன­மா­டி­னர் கிரு­‌ஷ்­மிதா ‌ஷிவ் ராம், அய்­யா­கண்ணு அபி­ராமி, திவ்­ய­‌ஸ்ரீ கிரு­‌ஷ்­ண­மூர்த்தி, ‌ஸ்ரு­திகா குமார், ‌சுவப்­ரியா சிதம்­ப­ரம் மற்­றும் நந்­தினி சிவ­க்கு­மார்.

'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்­டளை ஆறு' எனும் கண்­ண­தா­ச­னின் வரி­க­ளுக்­கான விளக்­கத்தை வில்­லுப்­பாட்டு மூலம் பகிர்ந்­த­னர் சு. ‌‌‌ஷண்­மதி, அடைக்­கப்­பன் வள்­ளி­யம்மை, நந்­தினி சிவக்­கு­மார், ஸஹானா ஞானா­னந்­தம் மற்­றும் கிரு­‌ஷ்­மிதா ‌ஷிவ் ராம்.

மனம் இருந்­தால் வழி உண்டு என்­ப­தால் மனதை நல்­வ­ழிப்­ப­டுத்தி, எல்­லோ­ரும் சிறந்த வாழ்க்­கையை வாழ­வேண்­டும் என்று கண்­ண­தா­சன் வழி­காட்­டி­யுள்­ளார் என்றும் தன்­னம்­பிக்­கை­யை­யும் தைரி­ய­மும் கொண்டு மனி­தன் வாழ­வேண்­டும் என்­றும் வில்­லுப்­பாட்டு மூலம் எடுத்­து­ரைத்­த­னர் மாண­வர்­கள்.

ஒவ்­வொரு காட்­சிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்­கும் ஏற்­பு­டைய உடை­க­ளை­யும் அலங்­கா­ரத்­தை­யும் சரி­வர செய்­தி­ருந்­த­னர் தேசிகன் திப்தா, ஹரினி பவா­னந்­தம், ‌சுவப்­ரியா சிதம்­ப­ரம், எம் ஆயி‌‌‌ஷா ‌ஷிஃபானா, ஜெனிஸ் ‌ஷெரின் ஜோசஃப், செல்வகுமார் ஹனி‌‌‌ஷா மற்­றும் சீனி­வா­சன் சிவ ரஞ்­சனா.

மேடை நிர்­வா­கத்­திற்குப் பொறுப்பு வகித்­த­னர் சங்­கீதா செல்­வ­ராஜு, பால­மு­ரு­கன் வி‌ஷ்வா, தேவேந்­தி­ரன் ராம­சந்­தி­ரன், முஹம்­மது ‌‌ஷரிஃப் உமர், அ‌ஷ்­வின் செந்­தில்­வே­லன்.

சிவ­கு­மார் அர­விந்த், அஜெய் கார்த்­திக் பால­சுப்­ர­ம­ணி­யன், லாவண்யா கணே­சன் கிருத்­திக்­கேஷ், ரெத்­தி­னம் ரெபேக்கா, தம்­பட் சமர்த் ‌ஷிவா­னந்த், ட்ரிஸ்டன் ஆகி­யோர் காணொ­ளியை சிறப்­பா­கத் தயா­ரித்து, விளம்­ப­ரப் பிரி­வை­யும் பொறுப்­பேற்று நடத்­தி­னர். நிகழ்ச்­சியை ஜோதி பாரதி நரே­னும் சிவ­‌சண்­முகப் பிரி­யா­வும் வழிநடத்­தி­னர்.

"நிகழ்ச்­சி­யைப் படைக்­கும்­போ­து­தான் தமி­ழர்­க­ளின் பாரம்­பரிய கலை­யான கதா­கா­லட்­சே­பத்­தின்­வழி மக்­க­ளுக்கு நல்ல செய்­தி­க­ளைத் தெரி­விப்­பது, ஒரு விஷ­யத்­தைப் பற்­றிய விழிப்­பு­­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது பற்றி அறிந்­து­கொண்­டேன். கதா­கா­லட்­சே­பம் பற்றி இளை­யர்­கள் பல­ருக்­குத் தெரி­யாது. அவர்­கள் நாங்­கள் படைத்த நிகழ்ச்­சி­யின்­வழி பய­னடைந்­தி­ருப்­பர்," என்று ரெத்­தி­னம் ரெபேக்கா சொன்­னார்.

மாண­வர்­கள் குழு­வா­கச் செயல்­பட்டு, ஒரு­வ­ரை­யொ­ரு­வர் உற்­சா­கப்­ப­டுத்தி இயங்­கி­யது மிக்க மகிழ்ச்சி அளித்­த­தா­கக் கூறி­னார் அண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் தமி­ழா­சி­ரியை திரு­வாட்டி கம­ல­வாணி பாலை­யன்.

தமிழ்­மொ­ழியை வாழும் மொழி­யாக நிலைத்­தி­ருக்க இந்த நிகழ்ச்சி நல்ல தள­மாக அமைந்­தது. தமிழ் இலக்­கி­யங்­கள் மீதான புரி­த­லும் விருப்­ப­மும் தமிழ்­மொழி மீதான ஈடு­பா­டும் மாண­வர்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்­ளது. மாண­வர்­களே இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தன் வழி, மொழி­யின் பயன்­பா­டும் விருப்­ப­மும் மேன்­மை­பெற்­றுள்­ளது," என்று கூறி­னார் அந்­தத் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் வழி­காட்டு ஆசி­ரி­யர் திரு வீர­முத்து கணே­சன்.

இந்த நிகழ்­வின் காணொ­ளி­யைக் காண கீழ்க்­கண்ட 'கியூ­ஆர்' குறி­யீட்டை வரு­ட­வும்:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!