தமிழ் மொழி பண்பாட்டுக் கூறுகளுடன் தொடக்கக்கல்லூரியில் தாய்மொழி விழா

"ஆளப் போறான் தமி­ழன் உல­கம் எல்­லாமே…"

"இந்த ஆரம்­பம் புதுசு….வர­லாறு பெருசு... எந்த மானுட குல­மும்…எங்க புகழ தொட்­டது கெடை­யாது..."

- என்­பது போன்ற தமிழ்த் திரை­யி­சைப் பாடல்­கள் ஒலிக்க, இரு­வா­ரங்­க­ளுக்­குக் களை­கட்­டி­யது தெம்­ப­னிஸ் மெரி­டி­யன் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் தாய்­மொழி விழா.

சிங்­கை­யில் தமிழ் மொழி மாத விழா கொண்­டாட்­டங்­கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கும் இம்­மா­தத்­தில், எங்­கள் கல்­லூ­ரி­யில் இரு­வார தாய்­மொழி விழா கொண்­டா­டப்­பட்­டது.

'நமது இன மர­பு­டை­மையை அர­வ­ணைப்­போம்' என்ற கருப்­பொ­ரு­ளில் அமைந்த இவ்­வாண்­டின் கொண்­டாட்­டத்­தில், தமிழ் மாண­வர்­கள் அனை­வ­ரும் உற்­சா­கத்­துடன் பங்­கேற்­ற­னர். 

இவ்­விழா தாய்­மொ­ழி­கள் மீதான ஆர்­வத்­தை­யும் ஈடு­பாட்­டை­யும் வளர்க்­கும் நோக்­கில் ஆண்­டு­

தோ­றும் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றது. தமிழ் மர­பை­யும் பண்­பாட்­டை­யும் அர­வ­ணைப்­பது இதன் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்­றா­கும்.

இவ்­வாண்டு கிரு­மித்­தொற்று கார­ண­மாக கற்­றல் பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யாத நிலை­யில், இந்­திய மர­பு­டைமை நிலை­யம்,

இந்­திய பாரம்­ப­ரிய கைவி­னைக் கலை­கள் மற்­றும்  விளை­யாட்­டு­கள் பற்­றிய கண்­காட்சி கல்­லூ­ரி­வளாகத்திலேயே சிறப்புற அமைக்­கப்­பட்­டது. 

எங்­கள் பள்ளி அரங்­கத்­தில் நடை­பெற்ற இந்­தக் கண்­காட்சி இந்­தி­யர்­க­ளின் மர­பை­யும் பண்­பாட்­டை­யும் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்­ப­ளித்­தது.

தமிழ் மொழி பேசும் மாண­வர்­கள் மட்­டு­மல்­லாது மற்ற மாண­வர்­களும் அந்த இரு­மொழி கண்­காட்­சி­யைக் கண்டு மகிழ்ந்­த­னர். 

மொழி சார்ந்த புதிர்­ப்போட்­டி­கள், பண்­பாட்­டுப் படைப்­பு­கள் என்ற வரி­சை­யில் AKT நிறு­வ­னம் நடத்­திய தமி­ழர் பாரம்­ப­ரிய கலை­கள் பற்­றிய பயி­ல­ரங்கு, நமது பாரம்­ப­ரி­யக் கலை­க­ளின் அருமை பெரு­மை­களை எங்­க­ளுக்கு எடுத்

­து­ரைத்­தது.

இந்­தக் கொண்­டாட்­டங்­க­ளின் முத்­தாய்ப்­பாக அமைந்­தது நாங்­கள் மேற்­கொண்ட செயல்­வழி விழு­மிய நட­வ­டிக்கை.

இம்­மா­தம் புத்­தாண்­டைக் கொண்­டா­டிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் 530 அன்­ப­ளிப்புப் பைகளை தயா­ரித்து அதில் அவர்­க­ளுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருள்­களை நாங்­கள் அனுப்­பி­வைத்­தோம்.

சிங்­கப்­பூ­ருக்கு வந்து, தமது முன்­னேற்­றத்­திற்­கும் சிங்­கை­யின் வளர்ச்­சிக்­கும் உழைக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு நன்றி கூறும் வகை­யில் அன்­ப­ளிப்­பு­க­ளு­டன் மாண­வர்­களே தயா­ரித்த வாழ்த்­துச் செய்­தி­க­ளை­யும் வண்­ணச் சுவ­ரொட்­டி­க­ளாக அச்­சிட்டு அனுப்­பி­னோம்.

இந்த அன்­ப­ளிப்­பு­க­ளைப் பெற்­ற­தும் ஊழி­யர்­க­ளின் முகத்­தில் தெரிந்த புன்­ன­கையே எங்­க­ளின் கடின உழைப்­புக்கு வெகு­ம­தி­யாக அமைந்­தது.  

மொத்­தத்­தில் இந்த இரு­வார தாய்­மொழி விழா கொண்­டாட்­டம், தமிழ் மொழி, பண்­பாடு, கலை, மரபு சார்ந்த பல அரிய செய்­தி­க­ளைக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பை அளித்­த­தோடு தமிழ்ச் சமூ­கத்­திற்கு எங்களால் முடிந்த சேவையை ஆற்­ற­வும் வாய்ப்­ப­ளித்­தது. 

இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் அனு­ப­வங்­கள் மாண­வர்­க­ளின் வாழ்­வில் தமிழை வாழும் மொழி­யாக விளங்­கச் செய்­யும் என்­ப­தில் ஐய­மில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!