‘முரசு பிஸ்ட்ரோ’வில் சுற்றுச்சூழல் அக்கறைகள்

இந்து இளங்­கோ­வன்

தொடக்­கப்­பள்ளி பாடப் புத்­த­கங்­களில் தொடங்கி பெரு­வி­ரைவு ரயில் நிலை­யங்­க­ளின் விளம்­ப­ரப் பல­கை­கள் வரை புவி வெப்ப

மய­மா­தல் உல­கில் ஏற்­ப­டுத்தக்­கூடிய பேர­ழி­வைப் பற்­றிய விழிப்­புணர்வை மக்­க­ளி­டையே அதி­க­ரிக்க பல முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு ­வ­ரு­கின்­றன.

பல ஆண்­டு­க­ளா­கப் பொருள்­களை மறு­ப­ய­னீடு செய்­ய­வும், தண்­ணீ­ரைச் சேமிக்­க­வும், பிளாஸ்டிக் பைக­ளின் பயன்­பாட்­டைக் குறைக்­க­வும் நமது அரசாங்­க­மும் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு அமைப்­பு­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

நம்­மில் பலர் வெப்­ப­ம­ய­மா­த­லின் தாக்­கங்­க­ளை­யும் அபா­யங்­களை­யும் அறிந்­தும் சுற்­று­சூழலைப் பாது­காப்­பிற்­கேற்ப வாழ்க்கை முறை, பழக்க வழக்­கங்­களை மாற்­றிக்­கொள்­வ­தில்லை.

இதற்கு என்ன கார­ணம்?

நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும், நிறு வனங்­களும் உலக வெப்­ப­மயமா தல் தொடர்­பில் எத்­த­கைய முக்­கிய பங்­கு­வ­கிக்­கி­றோம் என்பதைப் பற்றி உரை­யாட சுற்றுச் சூழல் ஆர்­வ­லர் பொன்னி சிவகுமார் மற்­றும் 'சஸ்­டெய்­ன­பல் லிவிங் லேப்' நிறு­வ­னர் திரு வீரப்பன் ஆகி­யோர் 'முரசு பிஸ்ட்ரோ'வின் ஐந்­தா­வது பாகத்­தில் தமிழ் முர­சு­டன் இணைந்­த­னர்.

மின்­சா­ரப் பயன்­பாட்­டைக் குறைப்­பது, இலை, சணல், காகிதப் பை, கண்­ணாடி புட்­டி­கள், துணிப்பை போன்­ற­வை­களை பிளாஸ்­டிக் பொருள்­க­ளுக்கு மாற்­றா­கப் பயன்­ப­டுத்­து­வது, பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வது, பொருள்­களை மறு­ப­ய­னீடு செய்­வது என அன்­றாட வாழ்­வில் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்­காக நாம் செய்­யக்­கூ­டி­ய­வை­யும் பலவுண்டு.

வசதி, மலி­வான விலை இது போன்ற கார­ணங்­க­ளால் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்கு உரிய அக்­கறை செலுத்­தத் தவ­று­கி­றோம். இது சாதா­ர­ண­மான விஷ­ய­மாக தோன்­றி­னா­லும், இத்­த­கைய சிறு மாற்­றங்­கள்­கூட சிற்­றுச்­சூ­ழ­லில் வியத்­தகு விளை­வு­க­ளைத் தரும் என்­கின்­ற­னர் விஞ்­ஞா­னி­கள்.

உரை­யா­ட­லைக் காண இந்த 'கியூ­ஆர்' குறி­யீட்டை வரு­ட­வும்:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!