சமாளிக்க கல்வி நிலையங்கள் தயாராக வேண்டும்: ஹெங்

ஒரே­நே­ரத்­தில் கல்­வியை வழங்­கி­வி­டு­வ­தோடு ஊழி­யர்­கள் தேவைப்­

ப­டும்­போது அவ்­வப்­போது வந்து பயில்­வ­தற்கு ஏற்ற வகை­யில் சிங்­கப்­பூரிலுள்ள கல்வி நிலையங்கள் இருக்க வேண்­டும் என்­றும் வேலை­யு­டன் வாழ்க்கை என்­ப­தற்கு உத­வும் வகை­யில் அவ்­வாறு இருப்­பது சிறப்பு என்­றும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்தி உள்­ளார்.

குறிப்­பாக உயர் கல்­வித் துறை புதிய மாற்­றங்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் உரு­வெ­டுக்க வேண்­டும். தொடர்­கல்வி மற்­றும் மின்­னி­லக்­கம் என்று மாறி­வ­ரும் போக்­கு­

க­ளுக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஈடு­கொ­டுக்க வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்து உள்­ளார்.

“வாழ்­நாள் கற்­ற­லுக்­கும் வேலை­யில் ஏற்­படும் தடு­மாற்­றங்­க­ளைச் சமா­ளிக்க ஊழி­யர்­க­ளைத் தயார்­ப் படுத்­து­வ­தற்­கும் கைகொ­டுக்­கக்­கூ­டிய பெரிய மாற்­றம் என்­பது புதிது புதி­தாக உரு­வா­கும் தொழில்­நுட்­பங்­களே,” என்று குறிப்­பிட்ட திரு ஹெங், அதற்கு தானி­யக்­கத்தை உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.

வருங்­கால வேலை­மு­றையை வேக­மாக மறு­வ­டி­வ­மைக்க தானி­யக்­கத்­தால் இய­லும் என்­றார் அவர்.

தென்­கி­ழக்­கா­சிய கல்­விக் கருத்­த­ரங்கு ஒன்­றில் பங்­கேற்று திரு ஹெங் உரை ­நி­கழ்த்­தி­னார். இதில் கிட்­டத்­தட்ட 300 பேரா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

டைம்ஸ் உயர்­கல்வி நிலை­யம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இக்கருத்­த­ரங்கை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) ஏற்று நடத்­தி­யது.

“மாண­வர்­கள் படித்து முடித்து சான்­றி­த­ழைப் பெறு­வ­தற்கு முன்­பா­கவே அவ­ரது கற்­ற­றிந்த அறி­வாற்­ற­லும் திற­னும் படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­வி­டு­கின்­றன.

“இந்த நில­வ­ரத்­தைச் சமா­ளிக்க தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரின் திற­னை­யும் வெவ்­வேறு கால­கட்­டத்­தில் தொடர்ந்து வளர்க்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

“இங்­குள்ள என்­யு­எஸ் போன்ற முத்­த­ரப்பு கல்வி நிலை­யங்­கள் தற்­போது பெரி­யோ­ருக்­காக நவீன உற்­பத்­தி­முறை மற்­றும் செயற்கை நுண்­ண­றிவு போன்ற துறை­க­ளுக்­கான பாடத்­திட்­டங்­களை தொகுத்து வழங்­கு­கின்­றன.

“இருப்­பி­னும் வாழ்­நாள் கற்­றல் என்­பது அவ்­வ­ளவு எளி­தன்று. வெவ்­வேறு முறை­க­ளு­டன் இடை விடாது பரி­சோ­திக்க வேண்­டிய அவ­சி­யம் இதற்கு உள்­ளது. கற்க வரும் பெரி­யோர்­க­ளின் வெவ்­வேறு விருப்­பங்­க­ளுக்கு ஏற்­பத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை­யும் உள்­ளது. அதே­நே­ரம் பரந்த கல்­வி­நோக்­க­மும் தேவைப்

­ப­டு­கிறது,” என்­றார் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங்.

வாழ்நாள் கற்றல் போன்ற புதிதாக உருவெடுக்கும் தேவைகள், மாறிவரும் போக்குகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!