ஈரான்

டெஹ்ரான்: ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
ஜெருசலேம்: அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்சி நகரத்தின் நெவார்க் பகுதியிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திற்குச் செல்லும் விமானச் சேவையை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2ஆம் தேதி வரை ரத்துச் செய்திருந்தது.
கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
துபாய்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானியர்கள் சிலர் உம்ரா புனிதப் பயணத்துக்காக ஏப்ரல் 22ஆம் தேதி சவூதி அரேபியா சென்றனர். இந்தத் தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டது.
கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய முன்னெப்போதும் இல்லாத வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களின் தாக்கத்தை ஈரானிய ஊடகங்கள் குறைத்து மதிப்பிட்டதால், ஆரம்பத்தில் ஏறிய கச்சா எண்ணெய் விலை பின்னர் சற்று குறைந்தது.