வானிலை

பட்டுவாகலி: பங்ளாதேஷில் அதிதீவிர புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மே 26) தங்கள் கரையோரக் கிராமங்களில் இருந்து வெளியேறி கான்கிரீட் வசதியுடைய பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையையும் இரவு நேரத்தில் வெப்பமான, ஈரப்பதத்துடன் கூடிய வானிலையயும் எதிர்பார்க்கலாம்.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
கனமழை காரணத்தால் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையத்தில் தாமதமும் ஏற்பட்டது.
பெய்ஜிங்: தென் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் விரைவுச்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.