லண்டன் பல்கலையில் தமிழ்த்துறை இந்திய ஒருங்கிணைப்பாளர்

சென்னை: சென்னை ஷெனாய் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருவாட்டி கனகலட்சுமி, லண்டன் பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசை மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் (SOAS) நிறுவப்படும் தமிழ்த்துறையின் இந்திய மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக  நியமிக்கப்பட்டு இருக்கிறார். 
லண்டன் சென்று தமிழ் வளர்ச்சி சார்ந்த அம்சங்களை முன்னெடுப்பது, தமிழ்மொழி கற்பித்தலில் ஆர்வமும் திறனும் உள்ள ஆசிரியர்களை அந்த அமைப்புடன் ஒருங்கிணைப்பது, அங்கு படிக்கும் மாணவர் களுக்கான ஆய்வுப் பணிக்கு வழிகாட்டுவது போன்றவை இவரின் பணிகளில் அடங்கும் என்று தெரிகிறது.
திருவாட்டி கனகலட்சுமி, தமிழை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவையாகவும் கற்பிக்கும் முறைகளைப் புதிது புதிதாக உருவாக்கி வருபவர். இது பற்றி ஆசிரியர்களுக்கும் இவர் பயிற்றுவித்து வருகிறார். 
இவரது புத்தாக்கக் கற்றல் முறைகள் மாணவர்களிடையே நல்ல பலன்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.