நாராயணசாமி: அதிமுக-பாஜக கட்டாய கல்யாணம்

மதுரை: கூட்டணியைப் பொருத்தமட்டில் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி கட்டாய கல்யாணம் செய்து இருக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி யுள்ளார்.
மதுரைக்கு வருகை தந்த நாராயணசாமி செய்தியாளர் களைச் சந்தித்தபோது,  ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக அரசு விவசாயிகளுக்கும் ஏழைப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். நரேந்திர மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய எந்த நிதி களும் சரியாக கிடைக்கவில்லை.