வெற்றி மீது சந்தேகம்: இருபதாண்டுகளில் ஆகக் குறைந்த எண்ணிக்கையில் அதிமுக போட்டி

கடந்த ஐந்து மக்களவைத் தேர்தல்களில் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. புதுச் சேரியைச் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இம்முறை 20 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்தது 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு வந்துள்ளது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக தனித்துப் போட்டியிட்டு 95 விழுக்காட்டு வெற்றியைப் பெற்று சாதனை புரிந்த அதிமுக இப்போது கூட்டணிக் கட்சி களை வலுக்கட்டாயமாகச் சேர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட் டுள்ளது.

காரணம், ஜெயலலிதா இல்லாதது தான். கருணாநிதியும் மறைந்துவிட்ட நிலையில் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
எந்த ஒரு கட்சிக்கோ கூட்ட ணிக்கோ சாதகமான அலை எதுவும் வீசவில்லை. எனவே ஆளும் தரப்பு தனது கட்சியின் வெற்றி மீது சந்தேகம் கொண்ட காரணத்தால்தான் தேமுதிகவைக்கூட விட்டுவிடாமல் அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொகுதிகளை ஒதுக்கித் தரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படு கிறது.

அதற்கு முக்கிய காரணம் அடுத்து வரவிருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல். போதிய பெரும்பான்மை பலம் இல்லாமலேயே ஆளும் கட்சியாக அதிமுக நீடிக்கி றது. 
நாடாளுமன்றத் தேர்தலில் மக்க ளின் ஆதரவைப் பெற்றுவிட்டால் சூட்டோடு சூட்டாக சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்தி அதன் மூலம் பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்பதும் அதற்குக் கூட் டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப் படும் என்பதும் அதிமுகவின் கணக்கு.
திமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இதற்கு முன்னர் கடந்த 1998ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி இதற்கும் குறைவாக 17 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. அப்போது வெறும் ஐந்து தொகுதி களிலேயே திமுகவால் வெல்ல முடிந்தது.
கடந்த தேர்தலில் பூஜ்யம் வாங்கிய திமுக, இம்முறை கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.