லஞ்சமின்றி வட்டாட்சி அலுவலகங்களில்  எந்த வேலையும் நடக்காது: நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தின் வட்டாட்சி அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு வேலையும் நடக்காது. வட்டாட்சி அலுவலகங்களில் பெற வேண்டிய சான்றிதழ் ஒவ்வொன்றுக்­கும் மக்கள் லஞ்சம் கொடுத்தே பெற வேண்டிய நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எல்லா அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஊழல் நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதை விடுத்து ஊழல் தடுப்புப் போலிசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.