ஜெயலலிதா பாணியில் தினகரன்: தனித்தே களம் காணுகிறார்

சென்னை: அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் கட்சியைக் கடந்த ஆண்டு தொடங்கிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நாடாளு மன்றத் தேர்தலையும்  18 சட்டமன் றத் தொகுதி இடைத்தேர்தலையும் தனித்தே சந்திக்கிறார். 
அதிமுகவின் இரும்புத் தலைவியாக இருந்த ஜெயலலிதா கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தனித்தே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட் பாளர் பட்டியலை வெளியிட்டு இந்தத் தேர்தலில் தினகரன் களத்தில் இறங்குகிறார் என்று பலரும் கூறுகிறார்கள். 
அதோடு மட்டுமின்றி, தின கரன் திட்டமிட்டபடி பிரசாரத்தை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார். அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் சார்பில் நாடா ளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களையும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்துள்ளார்.