சிட்டுக்  குருவிகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சென்னை: உலக சிட்டுக் குருவிகள் தினம் நேற்று கொண் டாடப்பட்ட நிலையில் அழிந்து வரும் குருவி இனங்களைப் பாது காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவை ஆர் வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அரசு கலைக் கல்லூரி  பேராசிரியர் மணிவண்ணனும் பறவைகள் ஆய்வு மாணவர் ரியாசும்  இயற்கை எழில்மிக்க நீலகிரி மாவட்டத்தில் சில பறவை இனங்களைக் காண் பது அரிதாகி விட்டது என்று கூறினர்.
இதில் சிட்டுக் குருவி இனங் கள் அழிந்து வரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கைத்தொலைபேசி கோபுரங் களிலிருந்து வரும் கதிர்வீச்சே சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 
“சில ஆண்டுகளுக்கு முன்பு கூரை வேய்ந்த வீடுகள் இருந்த தால் இதில் சிறு பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. தற்போது  பெரும்பாலான  வீடுகள், வணிக வளாகங்கள்  கான்கிரீட்  கட்டடங் களாக மாறிவிட்டதால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன,” என்று பேராசிரியர் மணிவண்ண னும் மாணவர் ரியாசும் தெரிவித் தனர். 
சிட்டுக் குருவிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.