சுடச் சுடச் செய்திகள்

தொடரும் விதிமீறல்: கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.233 கோடி

மக்களவைத் தேர்தலில் வாக் காளர்களைக் கவர அரசியல் கட்சியினர் பணமும் பொருட்க ளும் கொடுப்பதை இந்திய அதிகாரிகள் தடுத்து வருகின் றனர். சந்தேகத்துக்கு உரிய வாகனங்களை தேர்தலுக்கான பறக்கும் படையினரும் அரசியல் வாதிகளின் அலுவலகங்களை வருமான வரித் துறை அதிகாரி களும் சோதனையிட்டு வருகின் றனர். அந்த வகையில் இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகமான விதிமீறல்கள் நடந்து வருவதாகவும் ஏராளமான பணம் பிடிபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த பத்து நாட்களில் மட் டும் 137 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித் துறை அதிகாரி கள் கைப்பற்றி உள்ளனர். குறிப் பாக நேற்று முன்தினம் மட்டும் ஐந்து கோடி ரூபாய் சிக்கியுள் ளது. தமிழகத்துக்கு அடுத்து ஆந்திரப் பிரதேசத்தில் 95.7 கோடி பணம் சிக்கி உள்ளது. இரு மாநிலங்களில் மட்டும் 233 கோடி ரூபாய் சிக்கி உள்ளதால் பெருமளவிலான முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திமுக அதன் தொண்டர்களுக்கு வேண்டு கோள் ஒன்றை விடுத்துள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்ய காவல் துறை மற்றும் உளவுத் துறை யினரின் வாகனங்களில் அதி காரிகளே பணத்தை மறைத்து எடுத்துச் செல்வதாகவும் அதனைக் கண்டுபிடித்து தேர்தல் ஆணையர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு திமுக வினர் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon