சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் ஓட்டல் நடத்தும் ரயில் திருடன்

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாக ரயிலில் திருடி வந்த கொள்ளையன் மலேசியாவில் ஓட்டல் வாங்கியிருப்பதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “ரயிலில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது பிடிபட்டுள்ளான். 

“அவன் ரயிலில் திருடி 11 வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதுடன் மலேசியாவில் சொந்தமாக ஒரு ஓட்டலை வாங்கி நிர்வகித்து வருகிறான். 

“ரயில்களில் திருடிய 110 சவரன் தங்க நகைகள் அவனி டம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“கடந்த 4 ஆண்டுகளாக ரயிலில் சாகுல் ஹமீது திருடி வந்தான். 

“அவன் ரயிலில் முதல் வகுப் பில் டிக்கெட் பதிவு செய்து அதில் பயணம் செய்வான். 

“உடன் பயணம் செய்யும் பயணிகளுடன் கனிவாகப் பேசி, இரவில் அவர்கள் உறங்கும்போது அவர்களது உடை மைகள், நகைகளைக் கொள் ளையடிப்பதை தொழிலாகச் செய்து வந்துள்ளான். 

“தமிழ்நாடு-கேரளா செல் லும் ரயில்களைக் குறிவைத்து சாகுல் ஹமீது திருடி வந்தான்,” என்று பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். எனவே, பயணத் தின்போது ரயில் பயணிகள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரியாத நபர்களிடம்  தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon