காவல்துறை இயக்குநருக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற 30 அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாக காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரனுக்கு மாநகரப் போக்குவரத்து ஊழல் கண்காணிப்பு டிஜிபி ஜாங்கிட் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கூட்டத்தை இரு வாரங்களுக்குள் கூட்டி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தமது கடிதத்தில் ஜாங்கிட் எச்சரித்துள்ளார்.