நாடு முழுவதும் விதைப்பந்து: பயணம் தொடங்கிய 14 வயது மாணவி

கரூர்: பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் வகையில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் விதைப்பந்துகளை வீசும் பணியை கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவியான ரக்ஷனா, 14, தொடங்கினார். 

“கன்னியாகுமரியில் இருந்து இடதுபுறமாக காஷ்மீர் சென்று, வலதுபுறமாக மீண்டும் கன்னியாகுமரியை அடைய உள்ளேன். 

“8,000 கி.மீ. தொலைவு வரை சென்று 4 லட்சம் விதைப்பந்துகளை வீச 30 நாட்கள் ஆகும். என்னுடன் தந்தை உட்பட 15 பேர் வருகின்றனர். லாரி மற்றும் காரில் பயணிக்கத் திட்ட மிட்டுள்ளோம். “வாகை, வேம்பு, புளி உள்ளிட்ட 20 வகையான மரங்களின் விதைப்பந்துகளை நாடு முழுவதும் வீசுவோம்,” என்றார் மாணவி ரக்ஷனா.