2.86 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்சக்தி

சென்னை: தமிழக அரசின் புதிய சூரிய எரிசக்திக் கொள்கை 2019ன் ஒரு பகுதியாக நடப்புக்கு வந்த சூரிய எரிசக்தி திட்டத்தின் கீழ், ஏறக்குறைய 2.86 லட்சம் வீடுகள் பலன் அடைவதாக தமிழக எரிசக்தி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம், சென்னையில் உச்சநிலை மாநாடு ஒன்றில் பேசியபோது தெரிவித்தார்.