அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 21 பேருக்குப் படுகாயம்

மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. இதனை ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்றும் அழைக்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திமிறி ஓடும் முரட்டுக் காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை நிரூ பிப்பதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காளைகளை அடக்கும் சிறந்த வீரர்களுக்கும் சிறந்த காளை களுக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சுமார் 2,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை.

இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்ட னர். இதில் 680 வீரர்களும் 700 காளைகளும் பங்கேற்றுள்ளன.

வாடிவாசலில் இருந்து வெளி வரும் காளைகள் சீறிப் பாய்வதால் இதுவரை நான்கு மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கின.

நூற்றுக்கணக்கான காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்கியுள்ளதைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை நான்கு மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்கன் குளறுபடியால் மாடு உரிமையாளர்களைக் கட்டுப்படுத்த போலிசார் லேசான தடியடி நடத்தினர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அண்டா, குக்கர் என விதவிதமான பரிசுகளும் வழங்கப்பட்டன. அவனியாபுரத்தில் நேற்றும் பாலமேட்டில் இன்றும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ‘மெரினா புரட்சி’ என்று அழைக்கப் படும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை தமிழர்கள் மீட்டெடுத்தனர். ஜல்லிக்கட்டை ரசிக்கும் வண்ணம் ஆங்காங்கே எல்இடி தொலைக்காட்சிகளை மாவட்ட நிர்வாகம் அமைத்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!