தமிழக பட்ஜெட் : சொந்த வீடு கனவு நனவாகும்

சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் ஏழை, எளிய மக்களின் கனவு நனவாகும் அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து 10வது முறையாக சட்டப் பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநீள பட்ஜெட் இதுவாகும்.

ஓ.பன்னீர்செல்வம் வாசித்த 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

வரும் நிதியாண்டில், முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20,000 வீடுகளும் பிரதம ரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகளும் கட்டித்தரப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்காக ரூ.3,099.77 கோடியும் முதல்வர் பசுமை வீடு திட்டத்துக்காக ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப் பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த 1,28,463 குடும்பங்களுக்கு 35,470 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள குடும்பங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

விபத்து, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட நீதிமன்றக் கட்டடங்களுக்காக ரூ.1,317 கோடி நிதி ஒதுக்கீடு.

2018-19ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17%, 2019-20ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27% ஆக இருந்தது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட கடந்த ஆண்டு மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 5% அதிகமாக இருந்தது. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தின் மொத்த வருவாய் 2,19,375 கோடி ரூபாய் என்றும் மொத்தச் செலவு 2,41,601 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டது.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இணைப்புக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த மற்றும் பணிகள் மேற்கொள்ள ரூ.700 கோடியும் பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5,439 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி- முதல் வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி நிதி, இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் முன்னேற்றத் துக்காக ரூ.4,109 கோடி ஒதுக்கீடு, ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடி ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!