பாலியல் தொல்லை: ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை

சென்னை: செங்கல்பட்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் இருவர், 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பெயரில் கடந்த 2012ஆம் ஆண்டு இருவரும் கைதாகினர்.

ஆறு ஆண்டுகளாக நீடித்த வழக்கு விசாரணை யின் முடிவில், கடந்த 2018இல் இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தை அணுகினார். 

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த நேரடி சாட்சியத்தை அடுத்து, ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நாகராஜனுக்கு ஐந்தாண்டும், மற்றொரு ஆசிரியருக்கு மூன்று ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.