கிருமித்தொற்றை தடுக்க அமைக்கப்பட்ட ‘கிருமி நாசினி’ சுரங்கம்

திருப்­பூர்: கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கிருமி நாசினி சுரங்­கம் பல்­வேறு தரப்­பி­ன­ரின் பாராட்­டைப் பெற்­றுள்­ளது. 

இதே­போல் மாநி­லம் முழு­வ­தும் கிருமி நாசினி சுரங்­கம் அமைக்­கப்­பட வேண்­டு­மென பல­ரும் வலி­யு­றுத்தி உள்­ள­னர். 

திருப்­பூ­ரில் உள்ள தென்­னாம்­பா­ளை­யம் பகு­தி­யில் நடை­பெ­றும் காய்­க­றிச் சந்­தைக்கு நூற்­றுக்­க­ணக்­கா­னோர் வருகை புரி­வது வழக்­கம். விவ­சா­யி­கள், காய்­கறி சில்­லறை வியா­பா­ரி­கள், பொது­மக்­கள் என ஏரா­ள­மா­னோர் வந்து செல்­வதை அடுத்து அங்கு நோய்த் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க மாவட்ட நிர்­வா­கம் பல்­வேறு நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்­டுள்­ளது. 

இந்­நி­லை­யில் காய்­க­றிச் சந்­தைக்கு வரும் அனை­வ­ரும் அங்கு அமைக்­கப்­பட்­டுள்ள ஒரு சுரங்­கம் போன்ற அமைப்­பின் உள்ளே நுழைந்து வெளி­யேற வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டது. 

அந்­தச் சுரங்­கத்­துக்­குள் செல்­பவர்­கள் மீது சுமார் 5 விநா­டிக்கு உடல் முழு­வ­தும் கிருமி நாசினி தெளிக்­கப்­ப­டு­கிறது. 16 அடி நீளம்,  5 அடி அக­லம் கொண்ட இந்­தச் சுரங்­கப் பாதையை அமைக்க ஒரு லட்­சம் ரூபாய் செல­வா­ன­தாக அதை வடி­வ­மைத்த தன்­னார்­வ­லர் வெங்­க­டேஷ் தெரி­வித்­துள்­ளார்.

“கொரோனா கிரு­மித் தொற்று தாக்­கு­தலை உலக நாடு­கள் எப்­படிச் சமா­ளிக்­கின்­றன என்­பதை இணை­யம் வழி கவ­னித்­த­போது துருக்கி நாட்­டில் மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் இத்­த­கைய கிரு­மி­நா­சினி சுரங்­கம் அமைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. 

“எனவே, அதே­போன்று திருப்­பூ­ரி­லும் சுரங்­கம் அமைக்க முடிவு செய்­தோம்,” என்­கி­றார் வெங்­கடேஷ். 

பொது­மக்­கள் காய்­க­றிச் சந்­தைக்­குள் நுழை­யும்­போது இந்­தச் சுரங்­கத்­துக்­குள் கைக­ளைத் தூக்­கிக்கொண்டு செல்­ல­வேண்­டும்.  

அப்­போது 5 விநா­டி­க­ளுக்கு அவர்­கள் மீது மழைச்­சா­ரல் போல் கிரு­மி­நா­சினி மருந்து தெளிக்­கப்­படும்.

இதே­போன்று சந்­தை­யின் வெளிப்­ப­கு­தி­யி­லும் சுரங்­கம் அமைப்பதற்குத்  திட்­ட­மிட்­டுள்ள­தா­க வெங்­க­டேஷ் தெரி­வித்து உள்ளார்.