இனி சட்டம் கடமையை செய்யும்

சென்னை: எவ்­வ­ளவு சொன்­னா­லும், சிலர் கேட்­ப­தில்லை. இனி­மேல் சட்­டம் தன் கட­மை­யைச் செய்­யும் என்று பொது­மக்­களை தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி எச்­ச­ரித்­துள்­ளார்.

“கொரோனா கிருமி தீவி­ரத்தை உண­ரா­மல் சிலர் விளையாட்­டுத் தன­மாக வாக­னங்­களில் சுற்றி வரு கின்­ற­னர். நோயின் தாக்­கத்தை உணர வேண்­டும்.

“நோயை கட்­டுப்­ப­டுத்த அரசு எடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொது மக்­கள் முழு ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும். தடை உத்­த­ரவை மீறு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் அறி­வு­றுத்தியுள்­ளது.

“மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடப்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காக போடப்பட்டுள்ளது.

“அதை மனதில் வைத்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க தினசரி செல்லக் கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை கடைப்பிடிப்பது மக்களின் கடமை. ஆனால் எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும். பொதுமக்களுக்கு அரசு ஒத்துழைப்பு தருகிறது. இதை சரியாக பயன்படுத்த வேண்டும். தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழியில்லை. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

வெள்ளிக்கிழமை சென்னை ஆர்ஏ.புரம், சூளை, கண்ணப்பர் திடல், வேளச்சேரி, குருநானக் கல்லுாரி ஆகிய இடங்களில், தங்க வைக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்து அவர்களுக்கு அரசு சார்பில் உதவிகளை வழங் கினார்.

“அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் அதி கம் இயக்கப்படாததால் முக்கிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

“‘எந்த மாநிலமும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது’ என பிரதமர் கூறியுள்ளார். அதற்குள் நிலைமை சரியாகி விடும். மளிகை பொருட் களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

“அரசுக்கு வரும், ஜி.எஸ்.டி., வரி வருவாய் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிகிற, 1.34 லட்சம் பேருக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது,” என தமிழக முதல்வர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!