சுடச் சுடச் செய்திகள்

மூன்று மண்டலங்களில் 4,000 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள இதர மாவட்டங்களில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு கட்டுப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் இதன் பாதிப்பு கிடுகிடுவென பரவி வருகிறது.

15 மண்டலங்களைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மூன்று மண்டலங்களில் மட்டும் சுமார் 4,000 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இது கிட்டத்தட்ட 50% ஆகும்.

மூன்று மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கும் கோடம்பாக்கத்தில் 1,231 பேருக்கும் திரு.வி.க.நகரில் 1,032 பேருக்கும் கிருமி தொற்றியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தேனாம் பேட்டையில் 926 பேருக்கும் தண்டையார் பேட்டையில் 823 பேருக்கும் அண்ணா நகரில் 719 பேருக்கும் வளசரவாக்கத்தில் 605 பேருக்கும் இக்கிருமி பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 13,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியா னோரின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று வெள்ளிக் கிழமை காலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்து உள்ளது. அதேசமயம் இதுவரை 3,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் பலியாகி விட்டனர். தற்போது 5,624 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon