ஊரடங்கில் இலவச சிலம்பப் பயிற்சி கற்றுத்தரும் காவலர்

கமுதி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் தங்களது நேரத்தை வீணாக செல விடாமல் பயனுள்ள வழியில் செலவிட்டு வருகின்றனர் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கண்ணார்பட்டி, நந்திசேரி, அபிராமம், கோட்டைமேடு, அய்ய னார்குளம், நாராயணபுரம், முத்தாலங்குளம், சம்பகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர் களுக்கு சிலம்பப் பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். சிபிசிஐடி போலிஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி.

மாணவர்களும் பெற்றோரும் அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 9ஆம் வகுப்பிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் தற்காப்புக் கலையான மூன்று மாத சிலம்பப் பயிற்சியால் பயனடைந்து வருகின்றனர்.

கைபேசியில் வீணாகப் பொழுதைக் கழிக்காமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்தப் பயிற்சியில் பங்கேற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கமுதி மாணவர் நந்தீஸ் அத்வானி கூறியுள்ளார்.