கிருமி பயமின்றி காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

கிருமி பயமின்றி காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

1 mins read
92f5cabc-18d5-4a2b-9284-ea6981e5e5c0
சென்னை, காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக குவிந்த மக்கள். படம்: தி இந்து -

சென்னை: போலிஸ் கட்டுப்பாட்டையும் மீறி, சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக மக்கள் திரளாகக் குவிந்தனர். கொரோனா கிருமித்தொற்று பரவும் பயமின்றி, முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் பலரும் காசிமேட்டு சந்தையில் மீன் வாங்குவதற்காக நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றும்படி மத்திய, மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன. தடுப்புக் கம்புகள், வட்டங்கள் வரைதல் என எத்தனையோ முயற்சிகளை எடுத்தாலும் அவை எல்லாம் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.