மதுரையைக் காப்பதற்கு களமிறங்கிய இரு அதிகாரிகள்

மதுரையைக் காப்பதற்கு களமிறங்கிய இரு அதிகாரிகள்

1 mins read
b1c84d69-84b2-44f2-bcf6-0cac24a727b6
சந்­தி­ர­மோ­கன், டி.ஜி. வினய் (வலது). படம்: ஊடகம் -

மதுரை: சென்­னை­யைப் போலவே நமது மாவட்­டத்­தி­லும் கொரோனா கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து விடுமோ என்ற அச்­சத்­தில் உள்ள மதுரை மக்­க­ளுக்கு, பெரும் நிம்­மதி தரும் வகை­யில் அங்கு மருத்துவம் படித்த இரு ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் இணைந்து கள­மி­றங்கி உள்­ள­னர்.

கொரோனா பாதிப்­பின் திடீர் வேகம் மதுரை மாவட்ட மக்­களை பதை­ப­தைக்க வைத்­துள்­ளது.

கடந்த 10 நாட்­களில் மட்­டும் 500க்கும் மேலா­னோர் பாதிக்கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை 11 பேர் மது­ரை­யில் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

மாவட்­டங்­க­ளுக்கு ஒரு ஐஏ­எஸ் அதி­கா­ரியை கொரோனா பொறுப்பு அலு­வ­ல­ராக மாநில அரசு நிய­மித்து உள்­ளது.

தற்­போது மதுரை மாவட்­டத்­திற்கு ஐஏ­எஸ் அதி­காரி சந்­தி­ர­மோ­கன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரும் ஒரு மருத்­து­வர். மதுரை ஆட்­சி­யர் வின­யும் ஒரு மருத்­து­வர்.

இந்த தொற்றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்டு வரும் மருத்­துவ அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், "மது­ரை­யில் தொற்­றின் வேகம் தீவி­ர­மா­கி­யுள்­ளது. சென்­னையை விட மதுரை கடுமை யாகப் பாதிக்­கப்­படும் வாய்ப்­புள்­ளது. சென்­னை­யில் அரசு சார்­பில் பெரிய, பெரிய வச­தி­யுள்ள மருத்­து­வ­மனைகள் உள்­ளன. இங்கு ஒன்­று­தான் உள்­ளது. மதுரை மட்­டு­மின்றி பக்­கத்­தில் உள்ள ஆறு மாவட்­டங்களும் இந்த மருத்­து­வ­மனை­யைத்தான் நம்­பி­யுள்­ளன. நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை சென்னை போன்று தின­மும் ஆயி­ரம் ஆயி­ர­மாக அதி­க­ரித்­தால் என்ன செய்­வது எனத் தெரி­யா­மல் கலங்­கிப் போய் உள்­ளோம். மக்­கள் இனி­யும் அலட்­சி­யம் காட்­டி­னால் பேரா­பத்­தில் தான் முடி­யும்," என்­றார்.