தந்தை-மகன் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

மதுரை: சிறை­யில், தந்தை மகன் இரு­வ­ரை­யும் அடித்­துத் தாக்­கி­ய­தில் அவர்­கள் இரு­வ­ரும் உயி­ரி­ழந்ததாகக் கூறப்­படும் சம்­ப­வம் தொடர்பாகத் தொட­ரப்­பட்ட வழக்கை சிபி­ஐக்கு மாற்றி சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

நாட்­டு­மக்­களை மட்­டு­மின்றி அனைத்­து­லக மக்­க­ளின் மன­சாட்சி யையும் அசைத்­துப் பார்த்­துள்­ளது சாத்­தான்­கு­ளத்­தைச் சேர்ந்த தந்தை மகன் உயி­ரி­ழப்பு.

இந்­நி­லை­யில் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் பி. என். பிர­காஷ், புக­ழேந்தி அடங்­கிய அமர்வு கூடி­யது.

அப்­போது அர­சுத் தரப்பு கூடு­தல் தலைமை வழக்­க­றி­ஞர் செல்ல பாண்­டி­யன், தந்தை-மகன் உயி­ரிழந்த வழக்கை சிபி­ஐக்கு மாற்ற தமிழ்­நாடு அரசு முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

இதை­ய­டுத்து, அர­சின் கொள்கை முடி­வில் நீதி­மன்­றம் தலை­யிட முடி­யாது என்று கூறிய நீதி­ப­தி­கள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்­த­ர­விட்­ட­னர். சிபிஐ அதி­கா­ரி­கள் அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் மாஜிஸ்திரேட்­டி­டம் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர்கள் கூறி­னர்.

மு.க.ஸ்டா­லின் விடுத்­துள்ள பதி­வில், “பொது­மக்­கள், அர­சி­யல் கட்­சி­கள், ஊட­கத்­தி­ன­ரின் கடும் அழுத்­தத்­தால் வழக்கு சிபிஐ விசா ரணைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார். நீதி வழங்­கும் அர­சி­யல் துணிவு இருந்­தி­ருப்­பின் உயிர்­பறித்த காவல்­து­றை­யி­னர் இப்போ­தும் சுதந்­தி­ர­மாக உலாவ முடி­யுமா?” என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

இந்­நி­லை­யில், மர­ணம் அடைந்த சாத்­தான்­கு­ளம் வர்த்­த­கர்­க­ளான தந்தை-மக­னுக்கு உரிய நியா­யம் கிடைக்­கும் என்ற நம்­பிக்கை தற்­போது பிறந்­தி­ருப்­ப­தாக காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ப.சிதம்­ப­ரம் தனது டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

சிபிஐ விசா­ர­ணையைவிட சிறப்­புப் புல­னாய்­வுக்குழு­வின் விசா­ரணை உகந்­தது என்­பது என் தனிப்­பட்ட கருத்து. இருந்­தா­லும் சிபிஐ விசா­ர­ணையை வர­வேற்­கி­றேன் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

 தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.