தமிழகத்தில் 1,11,151 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி; 1,510 பேர் மரணம்

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் நேற்று காலை வரை மேலும் 4,150 பேருக்கு புதி தாக கொரோனா கிரு­மித் தொற்று பர­வி­யது உறு­தி­யா­னதை அடுத்து இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 1,11,151 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,510 ஆக உயர்ந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 60,592ல் இருந்து 62,778 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.

இது­கு­றித்து தமி­ழக சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், “தமி­ழ­கத்­தில் இன்று புதி தாக 4,150 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப் பட்­டுள்­ளது. அதில் 4,077 பேர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். சுமார் 73 பேர் வெளி­மா­நி­லங்­கள், வெளி நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

“இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் மொத்­தம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர் களின் எண்­ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்­துள்­ளது.

“தமி­ழ­கத்­தில் புதி­தாக பாதிக்கப்­பட்ட 4,150 பேரில் சென்­னை­யில் மட்­டும் 1,713 பேருக்கு கொரோனா உறு­தி­யாகி உள்­ளது.

“தமி­ழ­கத்­தில் 95 ஆய்­வ­கங்­கள் உள்­ளன. இந்த ஆய்­வ­கங்­களில் இது­வரை 13,41,715 மாதி­ரி­கள் சோதனை செய்­யப்­பட்­டுள்­ளன.

“கொரோனா பாதித்த, ஆண்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 68,085 ஆக­வும் பெண்­க­ளின் எண்­ணிக்கை 43,044 ஆக­வும் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 22 ஆக­வும் உள்­ளது. நேற்று மட்­டும் 2,186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­னர். இவர்­களை யும் சேர்த்து 62,778 வீடு திரும்பி உள்­ள­னர்,” எனத் தெரி­விக்­கப்­பட் டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!