கல்லூரித் தேர்வை நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தர கோரிக்கை

சென்னை: கல்லூரி ‘செமஸ்டர்’ தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்த வரும் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வு களை நடத்த உள்துறை அமைச்ச கம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரி யாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு களை நடத்தமுடியாத சூழல் உள்ளதால், இந்த ‘செமஸ்டர்’ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசுகளே தீர்மா னிக்க அதிகாரம் வழங்கவேண் டும்,” என வலியுறுத்தி உள்ளார்.