தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்குப் பரவும் கொரோனா

சென்னை மாந­க­ரை­யும் அதைச் சுற்­றி­யுள்ள திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கற்­பட்டு மாவட்­டங்

­க­ளை­யும் பாடாய்­ப­டுத்தி வரும் கொரோனா கிரு­மித்­தொற்று தற்­போது தமி­ழ­கத்­தின் தென்­மா­வட்­டங்­களில் பர­வும் அபா­யம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஊட­கங்­களில் எச்­ச­ரிக்­கைச் செய்­தி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அவ்­வாறு பர­வி­னால் மதுரை, விரு­து­ந­கர், ராம­நா­த­பு­ரம், நெல்லை, தூத்­துக்­குடி உள்­ளிட்ட பத்து மாவட்ட மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் அச்­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. குறிப்­பாக, மதுரை மாவட்­டத்­தில் ஜூன் மாதம் 20ஆம் தேதிக்கு முன்­னர் வரை கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பெரிய அள­வில் பதி­வா­க­வில்லை.

நாள் ஒன்­றுக்கு 10, 20 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு வந்த நிலை­யில் திடீ­ரென அந்த எண்­ணிக்கை 200, 300 என உயர்ந்­தது. அத­னால், மதுரை மாவட்ட மக்­கள் பரி­த­விக்­கும் நிலை உரு­வா­னது. தற்­போது வரை அந்­நி­லையே அங்கு தொட­ரு­கிறது.

கிருமி பாதிப்பு கார­ண­மாக உயி­ரி­ழக்­கும் விகி­த­மும் சென்­னையை மிஞ்­சும் அள­வுக்கு வேகமெ­டுத்து வரு­கிறது. மாண்­டோரை தக­னம் செய்­யும் மின் மயா­னங்­கள் இடை­வி­டாது இயங்­கத் தொடங்கி உள்­ளன. இப்­ப­டியே போனால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்­கை­யும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்­கும் நிலை உரு­வா­கக்கூடும்.

மது­ரை­யைப் போலவே திண்­டுக்­கல், தேனி, ராம­நா­த­பு­ரம், சிவ­கங்கை, விரு­து­ந­கர், திரு­நெல்­வேலி, தென்­காசி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி ஆகிய மாவட்­டங்­க­ளி­லும் அண்­மைய நாட்­க­ளாக கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்த வண்­ணம் உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்­தில் இம்­மா­வட்­டங்­களில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் பத்து மடங்­கிற்கு மேல் பாதிக்­கப்பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­விட்­டது.

தமி­ழ­கத்­தில் சென்­னை­தான் ஆக அதிக பாதிப்­புக்கு ஆளாகி வந்த நிலை­யில் தற்­போது மதுரை சென்­னை­போல் ஆகி­விட்­டது. பிற தென்­மா­வட்­டங்­கள் மது­ரை­யைப் போல் கிரு­மி­யின் கொடுங்­க­ரங்­க­ளுக்­குள் சிக்­கி­வி­டா­மல் பாது­காப்­பது அவசியம் என கரு­திய அதி­கா­ரி­கள் தீவிர நட­வடிக்­ கை­க­ளைத் தொடங்கி உள்­ள­னர்.

கிரு­மித்­தொற்று நில­வ­ரம் உச்சக்கட்­டத்­தைத் தொட்ட சென்னை மாந­க­ரில் இருந்து தங்­க­ளைக் காப்­பாற்­றிக்­கொள்ள ஏரா­ள­மா­னோர் கடந்த சில வாரங்­ க­ளாக வெளி­யேறி வேறு இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர்.

அவர்­களில் முக்­கால்­வா­சிப் பேர் தென் மாவட்­டங்­க­ளுக்கே சென்­ற­னர். மற்ற மாவட்­டங்­க­ளுக்­குள் அவ்­வாறு நுழைந்­த­வர்­களை முறை­யாக பரி­சோ­திக்­கா­மல் விட்­ட­ தால்­தான் அந்த இடங்­களில் கிரு­மித்தொற்று சம்­ப­வங்­கள் பெரு­கி­விட்­ட­தாக ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­ற­ன.

மேலும், தற்­போ­தைய பரி­சோ­திக்­கும் முறை போது­மா­ன­தாக இல்லை. மது­ரை­யில் தின­மும் 3,000 பேருக்கு கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை நடை­பெ­றும் நிலை­யில் மற்ற தென்­மா­வட்­டங்­களில் அந்த எண்­ணிக்கை நூறு, இரு­நூறு என்ற அள­வி­லேயே உள்­ளது. இவற்றை அதிகரிப்பதற் கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!