குடும்பத்தைக் காப்பாற்ற மீன் விற்கும் திரையரங்க ஊழியர்கள்

தஞ்­சா­வூர்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் தங்­க­ளது 100% வாழ்வாதார­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறும் தஞ்­சா­வூர் திரை­ய­ரங்க ஊழி­யர்­கள், இப்­போது தங்­க­ளது வாழ்க்­கைப் பாதையை மீன் வியாபாரம் பக்கம் மாற்­றிக்­கொண்­டுள்ளனர்.

கொரோனா ஊர­டங்­கால் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் 100 நாட்­க­ளுக்­கும் மேலாக திரை அரங்­கு­கள் மூடப்­பட்­டுள்ளன.

திரைப்­ப­டங்­கள் ஓடா­த­தால் கல்லா கட்­ட­மு­டி­யாத திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­கள், தங்­க­ளது ஊழி யர்­க­ளுக்கு சம்­ப­ளம் கொடுக்க முடி­யா­மல் திண­றி­னர்.

இத­னால் தவித்த ஊழி­யர்­கள் பல­ரும் ஆங்காங்கே தங்­கள் குடும்­பத்ை­தக் காப்­பாற்­று­வ­தற்­காக மாற்று வேலைகளில் இறங்கி உள்­ள­னர்.

தஞ்­சா­வூ­ரில் திரை­ய­ரங்­கில் வேலை பார்த்த மாரி­முத்து, சைமன், கணே­சன், ராஜா ஆகிய நான்கு ஊழியர்களும் மீன் வியா­பா­ரம் செய்து வரு­கின்­ற­னர்.

அவர்­கள் கூறு­கை­யில், “படம் நன்­றாக ஓடி­னால் சம்­ப­ளத்­து­டன் கூடு­த­லாக பணம் தருவார்கள்.

“திரை­ய­ரங்க தொழி­லைத் தவிர வேறு எந்த ஒரு வேலை­யும் எங்­க­ளுக்­குத் தெரி­யாது.

“தற்­போது திரை அரங்­கு­கள் மூடப்­பட்­ட­தால் மொத்த விலைக்கு மீன்­களை வாங்கி, சாலை­யோ­ரத்­தில் கடை போட்டு கூவிக் கூவி விற்­பனை செய்­கி­றோம். கூட்டாக செய்வதால் பிரச்சினைகள் தெரிய வில்லை. இதில் வரும் வரு­மா­னம் குடும்­பம் நடத்த ஓரளவு போது மானதாக உள்ளது,” என்ற­னர்.