தளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மீன் பிரியர்கள்

ராணிப்­பேட்டை: தமி­ழ­கம் முழு­வதும் ஒவ்­வொரு ஞாயி­றன்­றும் எந்த ஒரு தளர்­வும் இல்­லாத ஊர­டங்கு உத்­த­ரவு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், ராணிப்பேட்­டை­யில் அசைவப் பிரி­யர்­கள் மீன் வாங்க கூட்­ட­மா­கத் திரண்­ட­னர்.

பொது­வாக ஞாயிற்­றுக்­கி­ழமைகளில் மீன், இறைச்­சிக் கடை­களில் மக்­கள் கூட்­டம் அலை­மோ­து­வ­தால் தான் தளர்வு இல்­லாத ஊர­டங்கு உத்­த­ரவு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும் பெரும்­பா­லான மக்­கள் இந்த உத்­த­ரவை மீறும் வகை­யில் நடந்து கொண்­ட­னர்.

ஆற்­காட்டை அடுத்த முப்­பது வெட்டி கிரா­மத்­தில் சாலை­யோ­ரத்­தில் விற்­பனை செய்த மீனை முகக்­க­வ­சம் அணி­யா­மல், தனி­ந­பர் இடைவெளி­யைக் கடைப்­பி­டிக்­கா­மல் வாங்­கிச் செல்ல குவிந்த மக்­க­ளால் நோய்த் தொற்று பர­வும் அபா­யம் இருப்­ப­தாக அப்­ப­குதி மக்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­போல், நேற்று சென்னை காசி­மேடு பகு­தி­யில் சாலை­யில் அமைக்­கப்­பட்ட மீன்­க­டை­கள், திரு­வொற்­றி­யூ­ரில் உள்ள காய்­கறி, மீன் சந்­தை­க­ளி­லும் மக்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது. அத்துடன், சென்­னை­யில் உள்ள பெரும்­பா­லான இறைச்­சிக் கடைகளி­லும் மக்­கள் கூட்­டம் அலைமோதி­யது.