தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு பிறகு குறைந்த கிருமி பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 6,000க்கும் மேல் அதிகரித்து வந்த நிலையில், இப்போது இந்த பாதிப்பு 5,864 ஆகக் குறைந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியில் இருந்து 7000த்தை நெருங்கி வந்த தொற்று எண்ணிக்கை இரண்டு தினங்களாக குறைந்து வருகிறது. இந்த பாதிப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து விடும் எனவும் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இந்தக் கிருமியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 1,100 முதல் 1,300 என்ற அளவில் ஒரு நிலையாக இருந்து வருகிறது.

ஆனால், சென்னையை ஒட்டி யுள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் இந்த தொற்று பரவுவோர் எண்ணிக்கை அதிக அளவில் தினமும் பதிவாகி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் 119 கொரோனா பரி சோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் வியாழக் கிழமை ஒரே நாளில் மட்டும் 59,437 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டதில் 5,864 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

“இவர்களில் சென்னையில் மட்டும் 1,175 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுடன் சென்னையில் 98,767 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 239,978 ஆக அதிகரித்துள்ளது.

“இதுவரை கொரோனா பாதிப்பால் 3,838 பேர் உயிரிழந் துள்ளனர். இவர்களில் சென்னையில் மட்டும் 2,092 பேர் மரணம் அடைந் துள்ளனர்,” என்று தமிழக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.